Published:Updated:

`வெளிமாநிலங்களுக்கு 19 நாள் சுற்றுலா சென்ற 45 பேர்; மருத்துவ சோதனை!’ - கரூர் நிலவரம்

ஆன்மிக சுற்றுலா சென்றவருக்கு சோதனை
ஆன்மிக சுற்றுலா சென்றவருக்கு சோதனை

ஒருவழியாக சோதனையின் முடிவில், யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த 19 நாள்களாக மற்ற மாநிலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்று ஊர் திரும்பிய கரூரைச் சேர்ந்த 45 பேர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று சோதனையில் தெரியவரவே, மருத்துவர்களும், மாவட்ட மக்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள்.

சுற்றுலா சென்று வந்த பேருந்தில் கிருமிநாசினி தெளிப்பு
சுற்றுலா சென்று வந்த பேருந்தில் கிருமிநாசினி தெளிப்பு
`இது கொரோனாவை ஒழிக்காது.. ஆனா, புது நம்பிக்கை கொடுக்கும்!’ - கரூர் பெண்களின் புது முயற்சி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இதனால், இந்திய அரசும் இதை தேசியப் பேரிடராக அறிவித்து, 21 நாள்களுக்கு தொடர் சுய ஊரடங்கு உத்தரவுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைத்துள்ளது. இந்த நிலையில், கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் தென்பாகம் ஊராட்சியில் உள்ள வேடிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 45 நபர்கள், கடந்த மார்ச் 6-ம் தேதி ஆன்மிகச் சுற்றுலாவாக மகராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றுவிட்டு, சுற்றுலாப் பேருந்தில் நேற்று கரூர் திரும்பினர். இவர்களை வந்ததைக் கேள்விப்பட்ட மக்கள் பலரும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்குமோ என்று அஞ்சி ஒதுங்கினர்.

ஆன்மிக சுற்றுலா சென்றவருக்கு சோதனை
ஆன்மிக சுற்றுலா சென்றவருக்கு சோதனை

ஆனால், அதற்கு முன்பே ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த 45 பேர்களைப் பற்றி அறிந்த மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில் மற்றும் சுகாதாரத்துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரியங்கா ஆகியோர் கடந்த 24-ம் தேதி காலை முதல் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தனர். கூட்டமாக இருக்கும் இடங்களில் பேருந்தை நிறுத்தக் கூடாது, கவனமாக வரவும் என்று தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருந்தனர். இந்த நிலையில், நேற்று கரூர் திரும்பிய 45 பேரையும் வாங்கலில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரவழைத்தனர்.

பேருந்தில் வந்திருந்த சுமார் 45 நபர்களுக்கு சுகாதாரத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஒருவழியாக சோதனையின் முடிவில், யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அந்தச் சோதனை முடியும்வரை மருத்துவர்களும் சரி, சுற்றுலா சென்று வந்தவர்களும் சரி, இதைக் கேள்விப்பட்ட உள்ளூர் மக்களும் சரி, திக் திக் மனநிலையுடன் இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றதும்தான், பெருமூச்சு விட்டனர். இருப்பினும் இனி வரும் 28 நாள்களுக்கு இந்த 45 நபர்களும் தங்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பிறரோடு சகஜமாகப் பழகுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், காய்ச்சல், சளி இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வட்டார மருத்துவ அலுவலரையோ, வட்டாட்சியரையோ அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கோ (104, 04324-1077) தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலா சென்று வந்த பேருந்தில் கிருமிநாசினி தெளிப்பு
சுற்றுலா சென்று வந்த பேருந்தில் கிருமிநாசினி தெளிப்பு

அதோடு, `நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்' என்றும், `கரூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் உங்களுக்கு எப்போதும் ஒத்துழைப்புடன் உதவக் காத்திருக்கின்றோம்' என்றும் அறிவுரை வழங்கி அனைவரையும் அனுப்பி வைத்தனர். இவர்கள் வந்த பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. அதோடு, அந்த 45 பேர்களுக்கும் முகக் கவசம் வழங்கப்பட்டு, அவர்களின் கைகளில் கிருமி தொற்று இல்லாதவகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்த 45 பேரும், அடுத்த 28 நாள்களுக்கு மருத்துவத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு