Election bannerElection banner
Published:Updated:

`நகராட்சிப் பொறியாளருக்கு கொரோனா; புதிதாக 5 பேர்!' -தொடர் பாதிப்புகளால் கலங்கும் கரூர்

வெங்கமேடு
வெங்கமேடு

ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஏழு நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று. புதிதாக 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரூர் நகராட்சியில் பணியாற்றிய பொறியாளர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த அதிகாரி அமர்ந்து பணியாற்றிய அறையைப் பூட்டியதோடு, நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பொதுமக்கள் உள்ளே நுழையாதபடி தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டனர்.

கரூர் நகராட்சி
கரூர் நகராட்சி

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இதுவரை கரூர் மாவட்டத்தில் மொத்தம் 87 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

`6 வயதுச் சிறுமி முதல் 86 வயது முதியவர் வரை...' - கரூரில் கொரோனாவிலிருந்து மீண்ட 16 பேர்

இவர்களில் 80 நபர்களுக்கு நோய் குணமாக, தற்போது மீதமுள்ள 7 நபர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பூட்டப்பட்ட உதவி பொறியாளர் அறை
பூட்டப்பட்ட உதவி பொறியாளர் அறை
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வந்த ஒருவர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட, அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கரூர் நகராட்சியில் பணியாற்றும் உதவிப் பொறியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதேபோல, அந்த பொறியாளருடன் தொடர்பில் இருந்த மற்றொருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கரூர் நகராட்சி அலுவலகம் தினமும் பொதுமக்கள் வந்துபோகும் இடம் என்பதால், உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் அவர் பணிபுரிந்த அறை பூட்டப்பட்டது. மேலும், கரூர் நகராட்சி வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரூர் நகராட்சி
கரூர் நகராட்சி
நா.ராஜமுருகன்

பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழையாதவாறு, தடுப்புக் கட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பட்டது. இதேபோல, கரூரில் மேலும் மூன்று நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில், வெங்கமேடு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, அவர் வசிக்கும் தெருவை கட்டைகள் வைத்து அடைத்து, வெளிநபர்கள் உள்ளே நுழையாதபடி சீல் வைத்தனர். ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஏழு நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று. புதிதாக 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு