Published:Updated:

ஒன்பதில் இருந்து இரண்டாகக் குறைந்த பாதிப்பு... நம்பிக்கையளிக்கும் நீலகிரி! #Corona

Corona
Corona ( pixabay )

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நீலகிரியைச் சேர்ந்த 9 பேர்,கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில், 7 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

சுற்றுலா நகரான நீலகிரி, வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்துசெல்லும் இடமாகவும், கேரளா மற்றும் கர்நாடகாவோடு எல்லையைப் பகிர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள்மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகக் கருதி, முன்னதாகவே தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

ooty botanical garden
ooty botanical garden

ஆனால், டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள்மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. டெல்லி சென்று திரும்பிய 8 பேரில் முதலில் 4 பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தன. இவர்கள், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 4 பேரில், 14 நாள்கள் கழித்து மேற்கொண்ட சோதனையில், மூவருக்கு கொரானா அறிகுறிகள் இருந்தன. மேலும், இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 9 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

ooty garden
ooty garden

இந்நிலையில், இவர்கள் 9 பேரில் முதலில் சென்ற 4 பேருக்கு சிகிச்சை முடிந்து, கடந்த 18-ம் தேதி வீடு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு ஒருவர், நேற்று மாலை இருவர் என மொத்தம் என 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் டெல்லி சென்று திரும்பிய 7 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 7 பேரும் குணடைந்து வீடு திரும்பிவிட்டனர். அவர்களது குடுபத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே தற்போது கோவை மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

அவர்களும் ஓரிரு நாள்களில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ooty Market
Ooty Market

இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 பேருக்கும் சிகிச்சை காலம் முடிந்து வீடு திரும்பினால், நீலகிரி மாவட்டம் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத மாவட்டமாக மாறும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு