Published:Updated:

எடைக்குறைப்பு சர்ஜரி: மருத்துவமனைகளின் வலைவிரிப்பும் `ஷாக்' ரிசல்ட்டும்!

வைரஸ் தாக்கத்தாலும், அரிய புற்றுநோய் தாக்கியும் உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நலப் பாதிப்புக்கு ஆரம்பப்புள்ளி, பேரியாட்ரிக் அறுவைசிகிச்சைதான். ஒரு அமைச்சருக்குக் கிடைக்காத மருத்துவப் பராமரிப்பா? அவராலேயே இதை எதிர்கொள்ள முடியவில்லையெனில், சாமானியர்கள் நிலை?

பேரியாட்ரிக் சர்ஜரி
பேரியாட்ரிக் சர்ஜரி

உடல் எடைக்குறைப்புக்காக மருத்துவ உலகம் கண்டறிந்த `பேரியாட்ரிக் சர்ஜரி', இன்று பல தனியார் மருத்துவமனைகளின் கஜானாவை நிரப்ப தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடல் எடை அதிகமாக இருப்பவர்களின் வயிற்றுப் பகுதியின் குறிப்பிட்ட பகுதியை அகற்றுவது அல்லது ஸ்டேப்ளிங் முறையில் வயிற்றின் அளவைக் குறைப்பதே பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை. இதனால் உண்ணும் உணவின் அளவு குறைந்து, உடல் எடையும் குறையும். ஆனால், ஆரோக்கியக் காரணத்துக்காக மட்டுமல்லாமல்... அழகை முன்னிறுத்தியும் தேவையே இல்லாதவர்களுக்கும்கூட இந்த அறுவைசிகிச்சையை தனியார் மருத்துவமனைகள் செய்துவருகின்றன என்று கூறப்படுகிறது.

இந்திய உடல் எடைக்குறைப்பு அறுவைசிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் பேரியாட்ரிக் சர்ஜரியின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது. 2004-ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 200 பேருக்கு மட்டுமே செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சை, 2019-ம் ஆண்டில் 20,000 பேருக்குச் செய்யப்பட்டுள்ளது! அதற்கான கட்டணமும் அதிகரித்து நான்கு லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்த அறுவைசிகிச்சை செய்துகொண்ட பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன!

- பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை மருத்துவரின் விளக்கம், மருத்துவச் செயற்பாட்டாளரின் பார்வையையும் உள்ளடக்கிய சிறப்பு விழிப்புணர்வு கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > 15 ஆண்டுகளில் 100 மடங்கு... அதிகரித்துவரும் பேரியாட்ரிக் சர்ஜரி... விழித்துக்கொள்வது எப்போது?

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

160 கிலோ எடையுடன் இருந்த நடுத்தர வயதுடைய பெண்ணுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் வேறு சிக்கல்கள் அதிகரித்து, மருத்துவ மனையிலேயே அவர் உயிரிழந்தார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அந்தப் பெண்ணின் மகன், 'என் அம்மா இங்கு அறுவைசிகிச்சை செய்துகொண்டால், எனக்கும் என் தங்கைக்கும் சலுகைக் கட்டணத்தில் இதே சிகிச்சையைச் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதனால்தான் இந்த மருத்துவமனைக்கு வந்தோம்' எனத் தெரிவித்தார். மருத்துவமனைகள், இந்தச் சிகிச்சைக்கு இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்து நோயாளிகளைக் கவருவதாகக் கூறப்படுகிறது.

எடைக்குறைப்பு சர்ஜரி: மருத்துவமனைகளின் வலைவிரிப்பும் `ஷாக்' ரிசல்ட்டும்!

"வைரஸ் தாக்கத்தாலும், அரிய புற்றுநோய் தாக்கியும் உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நலப் பாதிப்புக்கு ஆரம்பப்புள்ளி, பேரியாட்ரிக் அறுவைசிகிச்சைதான். ஒரு மத்திய நிதியமைச்சருக்குக் கிடைக்காத மருத்துவப் பராமரிப்பா? அவராலேயே இதை எதிர்கொள்ள முடியவில்லையெனில், சாமானியர்களின் நிலை?"

- பேரியாட்ரிக் அறுவைசிகிச்சை மருத்துவரின் விளக்கம், மருத்துவச் செயற்பாட்டாளரின் பார்வையையும் உள்ளடக்கிய சிறப்பு விழிப்புணர்வு கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > 15 ஆண்டுகளில் 100 மடங்கு... அதிகரித்துவரும் பேரியாட்ரிக் சர்ஜரி... விழித்துக்கொள்வது எப்போது?

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |