Published:Updated:

`காற்றுமாசுபாடு உடல்நலனை மட்டுமல்ல, மனநலனையும் பாதிக்கும்..!’ - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

உலக சுகாதார அமைப்பு(WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் காற்று மாசுபடுதலின் காரணமாக மட்டும் சுமார் 7 மில்லியன் மனித உயிரிழப்புகள் நிகழ்வதாகப் புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறது.

காற்றுமாசுபாடு
காற்றுமாசுபாடு

காற்றுமாசு இன்று பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. ஏதோ டெல்லியில்தான் அந்தப் பிரச்னைபோலவும், நமக்கெல்லாம் நல்ல காற்று கிடைக்கிறது என்றும் நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, ஒவ்வொரு நகரங்களின் காற்றுமாசு குறித்த டேட்டாக்களும் கவலை தருவதாகவே இருக்கின்றன.

காற்றுமாசுபாடு
காற்றுமாசுபாடு

மாசுபட்ட காற்றின் மூலம் பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குழந்தை மரணங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் காற்று மாசுபடுதலின் காரணமாக மட்டும் சுமார் 7 மில்லியன் மனித உயிரிழப்புகள் நிகழ்வதாகப் புள்ளிவிவரத்துடன் தெரிவிக்கிறது. மரணத்திற்கும் உடல்நலக் குறைபாட்டிற்கும் பல்பேர் ஆளாகி வருகின்றனர். இத்தகைய பாதிப்புகள் காற்றின் தரத்திற்கும், மக்களின் உடல் நலத்திற்குமுள்ள நேரடித் தொடர்பின் உண்மையை மிகத்தெளிவாக விளக்குகின்றன. காற்று மாசுபாடு மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிவகுப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்த ஆய்வுமுடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

தலைநகரை மிரட்டும் காற்று மாசுபாட்டிற்கு என்ன காரணம்.? இது தமிழகத்தை தாக்குமா.? #VikatanInfographics

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... ஆரோக்கியக் குறைபாடு மட்டுமே காற்றுமாசு ஏற்படுத்தும் பிரச்னை இல்லை. காற்று மாசுபடுதலின் காரணமாக மனித மனதின் சமநிலை மற்றும் நிம்மதி பெருமளவு சீர்குலைவதாக ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

காற்றுமாசுபாடு
காற்றுமாசுபாடு

மனிதனின் மகிழ்ச்சிக்கும் காற்றின் தூய்மைக்கும் உள்ள தொடர்பை விளக்க, உலகளவில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக காற்றின் தரத்துக்கு ஏற்ப பாதிப்படையும் மக்களின் அகச்சூழலை மிகத்துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.

ஜெர்மனியின் ஒரு தொழிற்சாலையில், இத்தகைய ஆராய்ச்சித் திட்டச் செயல்பாடு நிகழ்த்தப்பட்டு அதன் கட்டுப்பாட்டு இயந்திரம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன் ஆய்வாளர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த 30,000 மக்களை 'காற்றின் திசையில் உள்ளவர்கள்' என்று ஒரு சாராரையும், 'எதிர் திசையில் உள்ளவர்கள்' என்று மற்றொரு சாராரையும் வகைப்படுத்தினர்.

காற்றுமாசுபாடு
காற்றுமாசுபாடு

இந்த ஆய்வின் முடிவில், காற்றின் திசையில் இருந்த மக்களின் மனநலத்தில் ஆரோக்கியமும் முன்னேற்றமும் இருந்தது கண்டறியப்பட்டது. எதிர் திசையிலிருந்த மக்களின் மனநலத்தில் எவ்வித மாற்றமுமின்றி இருப்பது தெரிய வந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் மக்களுக்கு அவர்களைச் சூழ்ந்திருக்கும் காற்றின் தரம் காரணமென்று உறுதி செய்யப்பட்டது.

`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

அதேபோல, சீனாவில் இயங்கிவரும் Sina Weibo என்ற மைக்ரோபிளாக் ப்ளாட்ஃபார்மில், மக்கள் தாங்கள் சோகமாக மற்றும் சந்தோஷமாக இருந்த தருணங்களைப் பதிவிடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றை, அந்தந்த தின காற்று மாசுபாட்டுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 144 நகரங்களைச் சேர்ந்த சீனர்கள் பங்குகொண்ட இந்தப் பதிவுகளை ஆராய்ந்ததன் முடிவில், தனிமனித மகிழ்ச்சி குறைவாக இருந்த தினங்கள், காற்று மாசுபாடு அதிகமாக இருந்த தினங்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

காற்றுமாசுபாடு
காற்றுமாசுபாடு

ஆக, நாம் மகிழ்ச்சியாக இருக்க பணமும் ஆரோக்கியமும் மட்டும் போதாது; நம் சுற்றுச்சூழலும் தீங்கின்றி இருக்க வேண்டும். தூய காற்று சுவாசிக்கக் கிடைக்க வேண்டும்