Published:Updated:

₹1,000 கோடி குறைந்த சுகாதாரத்துறை ஒதுக்கீடு; `திராவிட பட்ஜெட்டுக்கு' சில கேள்விகள்!

பட்ஜெட்

கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டிய தேவை இருப்பதாலும், கூடுதல் ஆட்களை அப்பணியில் ஈடுபடுத்த தேவை இருப்பதாலும், நிதி அதிகம் தேவைப்படும். இருந்தும் அதைக் குறைத்திருப்பது எப்படி சரியாகும்?

₹1,000 கோடி குறைந்த சுகாதாரத்துறை ஒதுக்கீடு; `திராவிட பட்ஜெட்டுக்கு' சில கேள்விகள்!

கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டிய தேவை இருப்பதாலும், கூடுதல் ஆட்களை அப்பணியில் ஈடுபடுத்த தேவை இருப்பதாலும், நிதி அதிகம் தேவைப்படும். இருந்தும் அதைக் குறைத்திருப்பது எப்படி சரியாகும்?

Published:Updated:
பட்ஜெட்

தமிழக அரசைப் பொறுத்தமட்டில் கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் என பட்ஜெட் அறிவிப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டிய தேவை உள்ளது.

முதலில், சென்ற ஆண்டு (2021-22) மக்கள் நலவாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 18,931.60 கோடி என இருந்தது, இந்த ஆண்டில் (2022-23) 17,901.73 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்புக்கான எந்த விளக்கமும் பட்ஜெட் உரையில் இல்லை.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக சுகாதாரத்துறையின் முழுப்பணியும் கொரோனா கட்டுப்பாட்டுக்கே அதிகம் செலவிடப்பட்டதால் மற்ற சுகாதாரப் பணிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

மேலும், கொரோனா காலத்தில் மருந்துகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ள வேளையில் ஏறக்குறைய 1,000 கோடி ருபாய் சுகாதாரத்துறைக்கு குறைத்து நிதி ஒதுக்கியது எப்படி சரியாகும்?

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பிப்ரவரி 2021-22-ல் சுகாதாரத்துறைக்கு 19,420 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அது 18,931 கோடியாக குறைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா பெருந்தொற்று முழுமையாக முடிவுக்கு வராத இந்நேரத்தில், கொரோனாவோடு சேர்த்து பிற சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய நிலை இருந்தும், அது செய்யப்படாமல் போனது சுகாதாரப் பணிகளை நிச்சயம் பாதிக்கும்.

கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டிய தேவை இருப்பதாலும், கூடுதல் ஆட்களை அப்பணியில் ஈடுபடுத்த தேவை இருப்பதாலும், நிதி அதிகம் தேவைப்படும். இருந்தும் அதைக் குறைத்திருப்பது எப்படி சரியாகும்?

Mask
Mask
AP Illustration/Peter Hamlin

பெண்களுக்கு பேறுகாலத்தில் அரசால் வழங்கப்படும் முத்துலட்சுமிரெட்டி பேறுகால நிதி உதவியும் சென்ற ஆகஸ்டில் 959.20 கோடியாக இருந்தது, தற்போதைய பட்ஜெட்டில் 817 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் இருந்தாலும், மறுபுறம் பேறுகால நிதி குறைக்கப்பட்டுள்ளது பெண்கள் அக்கறையில் அரசின் பங்கை கேள்விக்கு உட்படுத்துகிறது.

சில அரசு மருத்துவமனைகளை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை அளவுக்குத் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமூக நீதி, திராவிட மாடல், அனைவருக்கான வளர்ச்சி பற்றி பேசும் தி.மு.க அரசில் கிராமங்கள் புறக்கணிக்கப்படுவது எப்படி சரியாகும்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை, கிண்டியில் மக்களின் தேவைக்காகப் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்ற அறிவிப்பும் வியப்பாக உள்ளது. தமிழகத்தில் பல கிராமங்களில் மருத்துவ வசதி முறையாக இல்லாதபோதும், சென்னையில் ஏற்கெனவே பல அரசு மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்காக இருந்தும், கிராமங்களைப் புறம்தள்ளி சென்னையில் இன்னொரு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க என்ன தேவை உள்ளது?

பட்ஜெட்
பட்ஜெட்

குறிப்பாக, சமூக நீதி, திராவிட மாடல், அனைவருக்கான வளர்ச்சி பற்றி பேசும் தி.மு.க கிராமங்களைப் புறக்கணிக்கலாமா?

அரசு மருத்துவமனைகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் கிடைக்கும் மருந்துகளின் தரம் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அதை மேம்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்புகள் ஏதும் இல்லை.

சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு அதன் GDP-ல் 0.6% மட்டுமே நிதி ஒதுக்குவது போதுமானதன்று எனத் தமிழக அரசின் பொருளாதார குழுவில் இடம் பெற்ற நிபுணர் ஜீன் ட்ரீஸ் கூறுகையில், தற்போது எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டால் நல்லது. ஆக, போதுமான உரிய நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில் ஏழை/எளிய மக்கள் பயன்பெறுவதை எப்படி உறுதிசெய்ய முடியும்?

`ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' எனும் பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்று வெற்று வாசகமாக இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லையா?

- மரு.வீ.புகழேந்தி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism