Published:Updated:

புற்றுநோய் மருந்து விலை குறைகிறது; அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்ட பிற மருந்துகள் விவரம்!

மருந்துகள்

தற்போதைய திருத்தத்தின் மூலம், அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது 27 பிரிவுகளில் மொத்தம் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மெத்தில் டோபா உள்ளிட்ட 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் மருந்து விலை குறைகிறது; அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்ட பிற மருந்துகள் விவரம்!

தற்போதைய திருத்தத்தின் மூலம், அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது 27 பிரிவுகளில் மொத்தம் 384 மருந்துகள் இடம் பெற்றுள்ளன. மெத்தில் டோபா உள்ளிட்ட 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
மருந்துகள்

புற்றுநோய் எதிர்ப்பு மருந்து உள்ளிட்டவை, தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவற்றின் விலை குறைக்கப்பட உள்ளது.

கடந்த 13-ம் தேதி செவ்வாய் அன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், `அத்தியாவசிய மருந்துகள் பற்றிய தேசியப் பட்டியல் (NLEM)-2022’-ஐ, மத்திய சுகாதாரம், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

அப்போது பேசிய அமைச்சர், ``பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், அனைவருக்கும் குறைந்த செலவில் மருந்துகள் கிடைக்க வேண்டும் எனும் திட்டத்தை நோக்கி, சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

cancer
cancer
Pixabay

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலானது, 1996-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டு, 2003, 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் மறுதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய திருத்தத்தின் மூலம், அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் புதிதாக 34 மருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து தற்போது 27 பிரிவுகளில் மொத்தம் 384 மருந்துகள் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில், பென்டாமஸ்டின் ஹைட்ரோகுளோரைடு, ஐரினோடிகன் ஹைட்ரோகுளோரைடு ட்ரைஹைட்ரேட், லினாலிடோமைடு, லியூப்ரோலைடு அசிட்டேட் போன்ற முக்கிய நான்கு புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள், மான்டிலுயூகாஸ்ட் எனப்படும் ஆஸ்துமா மருந்து, லேடனோப்ரோஸ்ட் எனும் கண் மருந்து, இருதய நோய் மருந்துகளான டபிகட்ரான் & டெனக்டிப்லேஸ், கருத்தடை மருந்துகள், ஆர்மிலோஸைபின்ஸ், இன்சுலின்கள், பியூப்ரினார்ஃபைன் எனும் மருந்துகள் போன்றவை அடங்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருந்துகளுக்கான தேசிய நிலைக்குழுவின் (SNCM) துணைத் தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா தெரிவிக்கையில், ஐவர்மெக்டின், மீரோபினம், செஃப்யூராக்சைம், அமிகசின், பெடாகுயிலின், டெலமானிட், இட்ரகோனசோல் ABC டொலுடிக்ரேவிர் போன்ற மருந்துகளும் இந்தப் பட்டியலில் அடங்கும் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், இப்பட்டியலில் இருந்து ரனிடிடைன், சுக்ரால்பேட், ஒயிட் பெட்ரோலாக்டம், அட்டினலால், மெத்தில் டோபா போன்ற 26 மருந்துகள் நீக்கப்பட்டுள்ளன.

medicine
medicine

கல்வியாளர்கள், மருந்தியல் தொழில் நிபுணர்கள், பொதுக் கொள்கை வல்லுநர்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் போன்றோருடன் பல்வேறு கட்ட தொடர் ஆலோசனைக்குப் பிறகு, மருந்தின் செலவு, செயல்திறன், பாதுகாப்பு ஆகியவற்றை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தப் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.