Published:Updated:

உலக அளவில் குறையும் கொரோனா... இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்குவதன் காரணம் என்ன?

கொரோனா பரவல் ( Manish Swarup )

உலக அளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து, குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.

உலக அளவில் குறையும் கொரோனா... இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்குவதன் காரணம் என்ன?

உலக அளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து, குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது.

Published:Updated:
கொரோனா பரவல் ( Manish Swarup )

கொரோனா பரவல்:

உலக அளவில் கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் முதல் அலையில் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாம் அலை யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்ஸிஜன் கிடைக்காமல், வரிசையில் காத்திருந்த நிலையையெல்லாம் நாம் கண்முன்னே கண்டோம்.

கொரோனா
கொரோனா

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தின. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கொரோனா தடுப்பூசி பெரும் பங்காற்றியதாக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இந்தச் சூழலில்தான் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவல் ஆரம்பித்தது. இருந்தபோதிலும், அது இரண்டாம் அலைபோல அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மீண்டும் கொரோனா?

மூன்றாம் அலை குறைந்த நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 194 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. 88 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணைத் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டிருப்பதாக அரசுத் தரப்பு தகவல் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 11.1 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

இரண்டாம் அலை சமயத்தில் இந்தியாவில் நாளொன்றுக்கு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கும் நிலை உருவானது. பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்து தினசரி பாதிப்பு 1,000 என்ற அளவுக்கு வந்தது. பல்வேறு உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து, குறைந்துவரும் நிலையில், தற்போது இந்தியாவில் நாளொன்றுக்கு 8,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு:

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல, மத்திய அரசும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவ வல்லுநர்களோடு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

பல்வேறு உலக நாடுகளிலும், கொரோனா பரவல் அதிகரித்து, குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது மும்பையில் மட்டும் நாளொன்றுக்கு 1,700-க்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதிசெய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் மொத்தமாக 40,000-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் கடந்த 80 நாள்களில் ஒரு கொரோனா இறப்புகூட ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி.

கொரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தமிழ்நாட்டில், சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிளஸ்டர் உருவாகியிருக்கிறது. இந்த கொரோனா பரவலின் வேகமும் மிக அதிகமாக இருக்கிறது. இதே நிலைமைதான் இந்தியா முழுவதும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்கள் நிலைமைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகப் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் மந்தமாகவே இருந்தது. பல மாநிலங்களவை முக கவசம் அணியவேண்டாம் என்றதுமே, கொரோனா ஒழிந்துவிட்டது என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகியிருக்கிறது. அதன் விளைவு தான் இன்று தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

உதாரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று கூறி இப்போது மீண்டும் அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மும்பையில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க அதுவும் ஒரு மிகமுக்கிய காரணம். தமிழகத்திலும் அதே நிலைதான். மூன்றாம் அலையில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரியளவு பாதிப்பு ஏற்படாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் தடுப்பூசி மட்டுமே. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், கண்டிப்பாக இரண்டாம் அலை சமயத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு போல எதுவும் ஏற்படாது. இன்றளவும் தமிழகத்திலேயே கோடிக்கணக்கானோர் முதல் தவணை தடுப்பூசி அல்லது இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பொறுப்புணர்வுடன் இல்லை என்றால் தொற்று பரவல் அதிகரித்துத்தான் காணப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்கு மிக முக்கியம்" என்று பேசினார்.

கொரோனா தொற்று குறைந்ததும் முகக்கவசம் கட்டாயம் இல்லை என்று அரசுதான் கூறியது. இப்போது அதே அரசு தான் மீண்டும் மாஸ்க், உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற சொல்கிறது. கொரோனாவில் இருந்து முழுமையாக நாம் விடைபெறும் வரையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism