Published:Updated:

குரங்கு அம்மை, கொரோனா பரவல் - தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்த தமிழக அரசு!

கொரோனா வைரஸ்

குரங்கு அம்மை, கொரோனா பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை, கொரோனா பரவல் - தடுப்பு நடவடிக்கைகளை அதிகரித்த தமிழக அரசு!

குரங்கு அம்மை, கொரோனா பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
கொரோனா வைரஸ்

பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை அதிகரித்துவரும் நிலையில், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை
Twitter

அப்போது பேசிய அவர், ``ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய குரங்கு அம்மை நோயானது, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த குரங்கு அம்மை நோய் பரவலைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நோய் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் அறிகுறி குறித்து வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படவுள்ளது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மற்ற விடுதிகளிலும் பரிசோதனையைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்துவித மருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது. சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகியுள்ளது" என்று கூறினார்.

மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசியவர், ``BA A4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சென்னை மக்கள் மிகவும் கவனக் குறைவாக உள்ளனர். பொதுச்சுகாதார வழிமுறைகளைப் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரைக் குரங்கு அம்மை மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துமே தீவிரமாக நடைபெற்று வருகிறது. நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism