Published:Updated:

`விருப்பமுள்ள பெண்கள் வாடகைத்தாயாகலாம்!’- திருத்தியமைக்கப்பட்ட மசோதா

குழந்தை
குழந்தை

வாடகைத் தாய்மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள பல விதிமுறைகளை உள்ளடக்கிய வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவை மத்திய அரசு 2018-ம் ஆண்டின் இறுதியில் கொண்டுவந்தது.

ந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் ``குழந்தையின்மை" என்பது ஒரு பொது பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியருக்குச் சிறந்த தீர்வாக இருப்பவை ஐ.வி.எஃப்(IVF) என்ற செயற்கைமுறை கருத்தரித்தலும், வாடகைத்தாய் முறையும். ஐ.வி.எஃப் செய்வதில் சில சாதக பாதகங்கள் இருப்பதால் பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது என்னவோ வாடகைத்தாய் முறையைத்தான்.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தம்பதிகளுக்கு இந்தியா வாடகைத் தாய்களின் இருப்பிடமாக உருவாகி வருகின்ற நிலையில் வாடகைத் தாயாக வரும் பெண்கள் இடைத்தரகர்களினால் ஏமாற்றப்படும் மோசடிகள் நடைபெற்று வந்தன.

இதனால் வாடகைத் தாய்மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளப் பல விதிமுறைகளை உள்ளடக்கிய வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவை மத்திய அரசு 2018-ம் ஆண்டின் இறுதியில் கொண்டுவந்தது.

Vikatan

அதில், இந்தியாவில் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தை பெற நினைப்பவர்கள் இந்தியத் தம்பதிகளாக மட்டுமே இருக்க வேண்டும். தம்பதியரில் ஒருவருக்குக் குழந்தை பெறத் தகுதி இல்லாமல் இருக்க வேண்டும்.

வாடகைத்தாய் மசோதா
வாடகைத்தாய் மசோதா

வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்ணுக்கு 23 முதல் 50 வயதுக்குள்ளும், ஆணுக்கு 26 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதியினர் திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

குழந்தைப்பேற்றுக்கு வாய்ப்பில்லாதவராக தம்பதியரில் ஒருவராவது இருக்க வேண்டும். வாடகைத்தாயாக இருப்பவர் அந்தத் தம்பதிக்கு நெருக்கமான உறவினராக இருக்க வேண்டும். அவரும் திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும். வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக அமர்த்தக்கூடாது.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

ஆனால், மருத்துவச் செலவு, காப்பீட்டுச் செலவு போன்றவற்றை அவருக்குக் கொடுக்கலாம். வணிக ரீதியில் வாடகைத் தாய்களைப் பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுச் சிறை, 10 லட்சம் அபராதம் உள்ளிட்ட பல விதிமுறைகள் வாடகைத் தாய் மசோதாவில் இடம்பெற்றிருந்தன.

இந்த விதிமுறைகள் வாடகைத்தாய்மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதைக் கடினமாக்கியதைத் தொடர்ந்து பல தரப்புகளிலிருந்து இதற்கு எதிர்ப்பு வந்த நிலையில் மத்திய அரசு இதற்கென்று ஒரு தேர்வுக் குழுவை அமைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா பற்றி அந்தத் தேர்வுக் குழு சில பரிந்துரைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து அவை மத்திய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கருக்கலைப்பு உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தும் திருத்த மசோதா... சாதக, பாதகங்கள்!

இதன்படி, வாடகைத் தாய் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக மட்டும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுய விருப்பத்துடன், யார் வேண்டுமானாலும் வாடகைத் தாயாக இருக்கலாம், கணவரை இழந்தவர்கள அல்லது விவாகரத்து பெற்ற, 35 - 45 வயதுக்குட்பட்ட பெண்களும், வாடகைத் தாய் வசதியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

குழந்தை
குழந்தை

மேலும் வாடகைத் தாய் தேர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு கருத்தரிக்க இயலாமை காலமாக ஐந்து ஆண்டுகள் தேவை என்ற கட்டுப்பாடுகளை நீக்கவும் இந்தக் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் வாடகைத்தாய் மசோதா திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு