Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: பறவைக் காய்ச்சல் தாக்கிய பகுதிகளிலிருந்து வரும் வனப் பறவைகள்! - எச்சரிக்கும் ஆட்சியர்

பறவைக் காய்ச்சல் சோதனை
பறவைக் காய்ச்சல் சோதனை

பறவைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்கை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்.

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்துக்கு கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டியிருக்கும் கர்நாடகா மாநில பகுதிகளிலிருந்து கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருள்களை வாகனங்களில் ஏற்றிவர தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பறவைக் காய்ச்சல் சோதனை
பறவைக் காய்ச்சல் சோதனை

கக்கனல்லா, நம்பியார் குன்னு, சோலாடி, நாடுகாணி உள்ளிட்ட எட்டு சோதனைச்சாவடிகளில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்கொண்ட குழு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையுடன் இணைந்து பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய நாடுகளிலிருந்து இங்கு வரும் வனப்பறவைகள் மூலம் இந்த நோய் நமது நாட்டில் பரவ வாய்ப்பிருக்கிறது. கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளைத் தாக்கும். மனிதர்களையும் தாக்கவல்லது.

இன்னசென்ட் திவ்யா
இன்னசென்ட் திவ்யா

வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கோழி, வாத்து, வான்கோழி போன்ற பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக் கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், விலங்குகளைப் பண்ணைக்குள் நுழையவிடக் கூடாது. இதர பண்ணை உபகரணங்கள் பகிர்ந்துகொள்ளல் கூடாது. கோழிப் பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்டால் இந்த நோய் பரவாது.

பறவைக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும்" என்றார்.

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

கால்நடை மருத்துவர் பாலாஜி நம்மிடம் பேசுகையில், ``கேரளாவில் பாதிக்கப்பட்ட பறவைகளுக்குச் சோதனை செய்ததில் H5N8 என்ற வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சம் போன்றவற்றிலிருந்து அதிகம் பரவ வாய்ப்பிருக்கிறது. 15 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலை என்றால் பறவைகளின் எச்சத்தில் 10 நாள்கள் வரை இந்த வைரஸ் இருக்கும். மக்கள் பயப்படத் தேவையில்லை.உரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு