Published:Updated:

`கொரோனாவால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்!' - பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா தாக்கிய பிரிட்டன் அமைச்சர் நாடின் டோரிஸ்
கொரோனா தாக்கிய பிரிட்டன் அமைச்சர் நாடின் டோரிஸ்

கொரோனா வைரஸின் பாதிப்பு நான் சந்தித்த யாரிடமிருந்து எனக்குப் பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டறியச் சொல்லி சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

கொரோனா வைரஸின் தீவிரம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், பிரிட்டனிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சுமார் 26,000 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 382 பேருக்குக் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 80 வயது முதியவர் உட்பட ஆறு பேர் கொரோனாவால் அங்கு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா
கொரோனா

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரிட்டனிலிருந்து இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லக்கூடிய சுமார் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பொது மருத்துவர்களுக்கு பிரிட்டன் மருத்துவ சங்கத்தின் சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், அனைத்து மருத்துவர்களும் கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தன் வீட்டுக்குள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு, அறிவுறுத்தப்பட்டுள்ள மருத்துவ முறைகளைப் பின்பற்றி வருகிறார்.

கொரோனா
கொரோனா

அமைச்சர் டோரிஸ், ``கொரோனா வைரஸின் பாதிப்பு நான் சந்தித்த யாரிடமிருந்து எனக்குப் பரவியிருக்கக் கூடும் என்பதைக் கண்டறியச் சொல்லி சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

ட்விட்டரில் இது குறித்து போஸ்ட் செய்துள்ள டோரிஸ், "செவிலியராக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். எனக்கு இப்போது 62 வயதாகிறது. நான் இப்போது மோசமான நிலையில் இருப்பதாக உணர்கிறேன். செவ்வாய் அன்று என் அம்மாவுக்கும் இருமல் வரத் தொடங்கியது. என் கவலை எல்லாம் 84 வயதாகும் என் அம்மாவைப் பற்றியே" என்றிருக்கிறார்.

Isolation
Isolation
`சீனாவில் 70% கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்!' - உலக சுகாதார  நிறுவனம்

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் சுகாதாரச் செயலர் மாட் ஹான்ஹூக், டோரிஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டது சரியான செயல் என்றும், அவர் விரைவில் குணம்பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு