Published:Updated:

கொரோனாவை சமாளிக்கத் தக்க மருத்துவ வசதிகள் இந்தியாவில் உள்ளனவா...? #FightCovid19

மருத்துவ வசதிகள்
மருத்துவ வசதிகள்

கொரோனாவைப் பொறுத்தவரையில் பாதிப்புகள் கட்டுக்குள் வருவது போல் தெரியவில்லை. இன்னும் அதிகமாகும் என்றே உலக சுகாதாரத் துறையால் கணிக்கப்படுகிறது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தாக்கத்தைப் பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனாவுக்கு வெறும் 52 பரிசோதனை மையங்கள் மட்டுமே இருப்பதைச் சுட்டிக் காட்டி, மத்திய அரசு கொரோனா சிகிச்சை முறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன் கூறியுள்ளார்.

Corona Virus
Corona Virus
Pixabay

கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை மட்டும் 6,700 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் சுமார் 42,000-க்கும் மேற்பட்டோர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அதேபோல் உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அபாயமும் நிலவி வரும் நிலையில், தற்போதுவரை மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 2 பேர் இறந்துள்ளனர்.

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் நோய் பாதிப்பு கட்டுக்கோப்பான அளவில்தான் உள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் உயிர் இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது.

கொரோனா
கொரோனா
கொரோனா வீட்டுக்குள் வருவதைத் தடுக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுந்தரராமன், "கொரோனாவின் பிடியிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசு முழு முனைப்புடன்தான் செயல்பட்டு வருகின்றது. இருந்தாலும் அரசு கொரோனா விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பரிசோதனைக்கு 6,000 முதல் 7,000 ரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் தொகை குறைவான நாடான தென் கொரியா இதுவரை மட்டுமே சுமார் 2,50,000-க்கும் மேற்பட்ட ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் குறைவான நாடான தென் கொரியா தன் மக்கள் நலனில் செலுத்தும் கவனம் இதன் மூலம் நமக்குத் தெரிகிறது.

corona
corona
மக்கள் தொகையில் மிகப் பெரிய நாடான இந்தியாவில் வெறும் 52 பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. 138 கோடி மக்கள் வசிக்கும் மிகப் பெரிய நாட்டில் 52 பரிசோதனை மையங்கள் மட்டும் இருப்பது வருத்தமளிக்கிறது. அதேபோல் சிகிச்சை முறைகளிலும் இங்கு முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன.
தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன்

இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும், அப்படி வந்தவர்களின் உறவினர்களுக்கும் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த நிலை மாற வேண்டும்.

அதேபோல் இது விஷக்காய்ச்சல் பரவும் காலநிலை என்பதால் அதற்கும் நாம் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

Corona Virus
Corona Virus
`ஜிம் முதல்... ஹேர்கட் வரை' - கொரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? #SocialDistancingIsGood

அரசு கொரோனா பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் கூடுதலாக மையங்களைத் திறக்க வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதிகளவு மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் 600 மையங்களாவது இருந்தால் மட்டுமே கொரோனாவை வரும் நாள்களில் நம்மால் கையாள முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.

கொரோனாவைப் பொறுத்தவரையில் பாதிப்புகள் கட்டுக்குள் வருவதுபோல் தெரியவில்லை. இன்னும் அதிகமாகும் என்றே உலக சுகாதாரத் துறையால் கணிக்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் மாநிலத்தில் ஒரு மாவட்டத்துக்கு ஒரு பரிசோதனை மையம் அமைத்தால் மட்டுமே இந்த நோயை நம்மால் திறம்படக் கையாள முடியும்.
தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன்
public transport and corona
public transport and corona

பணம், வசதி படைத்தவர்களிடம் கொரோனா பாதிப்பு பற்றிச் சொல்லி வெளியே வராதீர்கள் என்றால் அவர்களுக்கு அது சாத்தியம். ஆனால், அதையே அன்றாடக் கூலியை நம்பி வாழ்க்கையை நகர்த்தும் ஏழைகளிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்?

பெரும்பாலான மக்கள் முகக் கவசங்கள் கூட அணிவதில்லை. மக்களிடையே இந்தப் பாதிப்பு பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணம். மக்களின் அறியாமை ஒருபுறம் இருக்க, தெரிந்தாலும் கூட மக்கள் கவனக்குறைவாகச் செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Corona Virus
Corona Virus

இந்த நோய்க்கு இதுவரை அதிகாரபூர்வமாக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு இதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு