Election bannerElection banner
Published:Updated:

`தடுப்பூசி போட்டவர்களுக்கு இனி க்வாரன்டீன் தேவையில்லை!' - CDC-யின் புதிய வழிகாட்டுதல் சொல்வது என்ன?

Coronavirus
Coronavirus

தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியுடன் பொதுவெளியில் இருப்பதும் கட்டாயம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒருவேளை கொரோனா வந்தாலும், அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறது அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம்!

Vaccine
Vaccine

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படவும் ஆரம்பித்துவிட்டன. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியுடன் பொதுவெளியில் இருப்பதும் கட்டாயம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிற அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையத்தின் (Center for Diseases Control and Prevention) அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

கொரோனோ வந்துவிட்டால் நீங்கள் ஆரோக்கிய மானவர்களாகவே இருந்தாலும், பெரிய அளவுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரியாவிட்டாலும், ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரைக்கும் கட்டாயம் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதுவரை விதியாக இருந்து வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்கான `முழுமையான தடுப்பூசி’யைப் போட்டுக் கொண்டவர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருந்தாலும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அவசியமில்லை என்று தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் அறிக்கையில் சிடிசி தெரிவித்திருக்கிறது.

க்வாரன்ட்டீன்
க்வாரன்ட்டீன்

அதென்ன முழுமையான தடுப்பூசி?

முதல் டோஸ் தடுப்பூசி அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு குறைந்தது இரண்டு வாரங்கள் கடந்திருக்க வேண்டும். தவிர, தடுப்பூசி போட்டுக் கொண்டதால் சம்பந்தப்பட்ட நபருக்கு எந்த அறிகுறிகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இவர்கள்தாம் முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள். இவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்திருந்தால் இனிமேல் தனிமைப் படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் சிடிசி வெளியிட்டிருக்கிற வழிகாட்டுதல் அறிக்கையின் முழு விவரம்.

கொரோனாவை வெல்வோம்!

இந்தியாவில் கொரோனாவின் ஓராண்டு: `பிரேசில் அலெர்ட்' முதல் மெத்தனம் வரை... இனியும் அபாயம் தொடர்கிறதா?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு