Election bannerElection banner
Published:Updated:

`கடந்த ஆண்டு மட்டும் 7,12,758 பேர்!'- இந்தியாவில் புற்றுநோயால் பாதித்த பெண்கள் குறித்த அரசின் டேட்டா

Cancer awareness
Cancer awareness

பெண்களிடையே தொடர்ந்து புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அப்படி, கடந்த ஆண்டில் மட்டும் 7,12,758 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து எழுத்துபூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, 'கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க 7,12,758 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய சுகாதாரத் திட்டம் மூலம், புற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு, எழுத்துபூர்வமாக, இந்தியாவில் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படுவது குறித்து மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத்தான் மத்திய அரசு, கடந்த 5-ம் தேதி, எழுத்துபூர்வமாக ஜோதிமணிக்கு பதிலளித்துள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு! - கொதிக்கும் ஜோதிமணி

அந்தப் பதிலில், 'பெண்களிடையே தொடர்ந்து புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அப்படி, கடந்த ஆண்டில் மட்டும் 7,12,758 பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து, தேசிய சுகாதாரத் திட்டம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தப் பதில் கடிதம் குறித்து ஜோதிமணி,

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

"இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் நிலையிலேயே கண்டறிந்தால், குணப்படுத்தக்கூடிய மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு செய்வது அவசியம். அதேபோல், புற்றுநோய் சிகிச்சைக்காகக் குறிப்பிட்ட சில நகரங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தைக் களைய, மாவட்டம் மற்றும் கிராமப்புறங்களில் போதிய மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இப்படி, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்ட, புற்றுநோய்க்கு எதிரான ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். இல்லையென்றால், நாளுக்கு நாள் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு