கொரோனா தடுப்பூசிகளை பொதுவாக மக்கள் வாங்கி உபயோகப்படுத்தும் வகையில் சந்தைப்படுத்த வேண்டுமென மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் சந்தைப்படுத்துதலின் `புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள்', 2019-ன் கீழ் சில நிபந்தனைகளின் அடிப்படையில இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் இனிமேல் மருத்துவமனைகளில் கிடைக்கும் என மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
எந்த மெடிக்கல் ஷாப்பிலும் இந்தத் தடுப்பூசிகள் விற்பனைக்கு வராது. மக்கள் இந்தத் தடுப்பூசிகளை மருத்துவமனைகள் மட்டுமே வாங்கிக்கொள்ள முடியும். இதை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் மட்டுமே வாங்க முடியும்.
மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்ட தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாடுத் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கோவின் (CoWIN) ஆப்பிலும் அந்தத் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த தடுப்பூசிகள் சந்தைப்படுத்தபட்டுள்ளன.

தடுப்பூசிகள் விற்பனைக்கு வரும் பட்சத்தில் ஒரு டோஸுக்கு ₹275 என முன்னதாக விலையை நிர்ணயித்திருந்தது மத்திய அரசு.
மருத்துவமனைகளில் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்த நிலையில், மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.