Published:Updated:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை 74 வயது மூதாட்டி குணமடைந்தது எப்படி?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த மூதாட்டி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த மூதாட்டி

``இந்த மருத்துவமனையில் நல்லா கேர் எடுத்துக்கொண்டார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இவ்வளவு சுகம் கொடுத்ததற்குக் கடவுளுக்கும் டாக்டர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த சென்னை மூதாட்டி கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தில் 738 பேருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சுகாதாரத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை 16,000 ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா பாதிப்பு உள்ளதா என்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் அளித்த ரிப்போர்ட் அடிப்படையில் 500 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

`9.25-க்கு அட்மிட்; 11.45-க்கு மரணம்... இறந்தபிறகு கொரோனா உறுதி’- அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?
கொரோனா பட்டியல்
கொரோனா பட்டியல்

தமிழகத்தில் மட்டும் நேற்று 48 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். அதில், சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``கடந்த 26.3.2020-ல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறலுக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அரசு பொது மருத்துவமனைக்குழுவால், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பூரண குணமடைந்த அவர், நேற்று வீடு திரும்பியுள்ளார். சிகிச்சையின்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தமும், கட்டுப்பாடற்ற சர்க்கரையும் நோயும் இருந்தது. முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, டாக்டர் ரகுநந்தனன் மற்றும் மருத்துவக் குழு, நர்ஸ்கள் மூதாட்டிக்குப் பழக்கூடை கொடுத்து வாழ்த்தினர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`கொரோனா தொற்றால் இறந்த தொழிலதிபர்' - கீழக்கரைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தியிடம் பேசினோம்``சென்னையைச் சேர்ந்த 74 வயது மூதாட்டிக்கு மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். அதோடு அவருக்கு ரத்த அழுத்தம், நீரழிவு நோயின் பாதிப்பும் அதிகளவில் இருந்தது. அதனால் அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தோம்.

24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் அவர் இருந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீம், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்ததன் பலனாக அவருக்கு மூச்சுத்திணறல் படிப்படியாகக் குறைந்தது. அடுத்து கொரோனா தொடர்பாகப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதில் அவருக்குக் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

குணமடைந்த மூதாட்டி
குணமடைந்த மூதாட்டி

கடந்த 4 தினங்களாக அவர், வென்டிலேட்டரின் உதவியில்லாமல் மூச்சுவிட்டார். அவர் பூரண குணமடைந்ததால் மூதாட்டியை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தோம். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அவர் செல்லும்போது அனைவருக்கும் தேங்க்ஸ் என்று கூறிவிட்டுச் சென்றார்" என்றார்.

மூதாட்டி, வார்டிலிருந்து வெளியில் வரும்போது நல்லா இருக்கீங்களா என்று மருத்துவக்குழுவினர் கேட்டதற்கு அவரும் சிரித்தமுகத்தில் ஆமாம் என்று கூறினார். பின்னர் அவர் நடந்து செல்லும்போது அனைவரும் கைகளைத் தட்டி மூதாட்டியை உற்சாகப்படுத்தினர்.

குணமடைந்த மூதாட்டி கூறுகையில், ``இது ரொம்ப நல்ல மருத்துவமனை, நல்லா கேர் எடுத்துக்கொண்டார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு இவ்வளவு சுகம் கொடுத்ததற்குக் கடவுளுக்கும் டாக்டர்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு