Published:Updated:

அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு... உண்மைகளை மறைக்கிறதா தமிழக அரசு?

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

இறப்பு விகிதத்தைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்' என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறது தமிழக அரசு. ஆனால்,

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் நம்மிடம், "கடந்த இரண்டு மாதங்களில் சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துமனையில் கொரோனா தொற்று காரணமாக சுமார் பத்துப் பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 26.3.2020-லிருந்து 30.5.2020 வரையிலான காலகட்டத்தில் இங்கு சுமார் 73 பேருக்கு போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிறார்கள். `இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களாக இருக்கலாம்' என்று சந்தேகம் எழுகிறது. இதற்கென தனிக்குழு அமைத்து மருத்துவ மனை ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

வட சென்னையில் 45 வயது பெண்மணி ஒருவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக் கிறார்கள். அவர் ஏழ்மையான குடும்பம்; பணம் வசூலிக்க முடியாது என்பதால், அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்லிவிட்டார்கள். ஒமந்தூரார் மருத்துவமனைக்கு அவர் வந்தபோது மூச்சுத்திணறல், குளிர்க் காய்ச்சல் என கொரோனா அறிகுறிகள் இருந்தன. ஓரிரு மணி நேரங்களில் அவர் இறந்துவிட்டார். கொரோனா பரிசோதனை எதுவும் செய்யாமல் 'சர்க்கரைநோய் காரணமாக இறந்துவிட்டார்' என்று சொல்லி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். இப்போது அவரது உடலைக் கையாண்ட உறவினர்கள் உட்பட அத்தனை பேருக்கும் கொரோனா பரவியிருக்கும். சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணம்" என்றார் வருத்தத்துடன்!

அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு... உண்மைகளை மறைக்கிறதா தமிழக அரசு?

- 'தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் 0.6 சதவிகிதம்தான். இறப்பு ஒரு சதவிகிதத்தைக்கூட எட்டவில்லை; இறப்பு விகிதத்தைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்' என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறது தமிழக அரசு. ஆனால், மருத்துவத்துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளோ, "ஒருவேளை மக்களைப் பீதியடைய வைக்கக் கூடாது என்பதால் அரசு சிலவற்றைச் சொல்லாமல் மறைக்கலாம். ஆனால், பரிசோதனை உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இந்த அரசு மொத்தமாகக் கைவிட்டுவிட்டது.

மருத்துவர்கள், செவிலியர்கள் தொடங்கி சாமானியர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை. நாம் நினைப்பதைவிட சென்னையில் வெகு வேகமாகப் பரவிவருகிறது கொரோனா. எங்கள் கணிப்பு சரியாக இருக்குமென்றால் சென்னையில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கலாம்!" என்று அதிரவைக்கிறார்கள்!

அவர்கள் சொல்வதை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் அடுத்தடுத்து சில உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதுதொடர்பான ஜூனியர் விகடன் இதழ் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. > ஐ.சி.யூ-வில் சென்னை... கோமாவில் அரசு! - 25 லட்சம் கொரோனா பாசிட்டிவ்? https://bit.ly/2Xq2vk5

தனியார் மருத்துவமனையிலிருந்து கதறல் குரல்!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நெய்வேலியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சில நாள்களுக்கு முன்னர் தவறி விழுந்து காயம் அடைந்தார். தோள்பட்டை எலும்புமுறிவு சிகிச்சைக்காக அவரை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே நுழைந்ததுமே கோவிந்தராஜின் பூர்வீகம், வருமானம் பற்றியெல்லாம் விசாரிக்கப்பட்டது. தோள்பட்டைக்குச் சிகிச்சையளிப்பதற்கு பதிலாக அவர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு, அங்கு நடந்ததைப் பார்த்து மனம் வெறுத்துப்போன அவர் ஜூ.வி அலுவலகத்துக்கு போன் செய்தார்.

அதிரவைக்கும் கொரோனா பாதிப்பு... உண்மைகளை மறைக்கிறதா தமிழக அரசு?

''முதலில் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்திவிட்டேன். மேற்கொண்டு கொரோனா சிகிச்சைக்கு பத்து நாள்கள் தங்க வேண்டும் ஏன்று சொல்லி ரெண்டே முக்கால் லட்ச ரூபாய் கட்டச் சொன்னார்கள். 'கொரோனா பாசிட்டிவ் இருக்கிறது. அதற்கும் தோள்பட்டை சிகிச்சைக்கும் சேர்த்தே பேக்கேஜ்' என்றார்கள். என்னுடன் வந்திருந்த என் மனைவிக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி, அதற்குத் தனியாக 10,000 ரூபாய் கட்டச் சொன்னார்கள். இதே ஆஸ்பத்திரியில் என்னைப்போலவே கொரோனா வார்டில் 50 பேர் வரை இருக்கிறார்கள். எல்லோருமே லட்சத்துக்கு மேல் பணம் கட்டியவர்கள். என்னை இந்த மருத்துவனையிலிருந்து எப்படியாவது மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்க உதவுவீர்களா?'' என்று கேட்டார். உடனே, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரான நாராயணபாபுவைத் தொடர்புகொண்டு பேசி உரிய ஆக்‌ஷனில் இறங்கியது.

- முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க > தனியார் மருத்துவமனையிலிருந்து கதறல் குரல்... ஆக்‌ஷன் எடுத்த ஜூ.வி https://bit.ly/3eI31Qg

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு