Published:Updated:

`கோவை தன்னார்வலருக்கு கொரோனா பாசிட்டிவா.. நெகட்டிவா? - மாறுபட்ட ரிப்போர்ட்டால் சர்ச்சை

கோவை
கோவை

கோவை தன்னார்வலருக்கு கொரோனா சோதனை குறித்து இரண்டு மாறுபட்ட ரிப்போர்ட்டுகள் வந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொப்பம்பட்டியைச் சேர்ந்த 61 வயது நபர், கடந்த மாதம் டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வருவதால், சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குச் சென்று கொரோனா பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருந்தாலும், அவரை 14 நாள்கள் தனிமையில் இருக்கச் சொல்லி சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

கோவை
கோவை

ஆனால், வீடு திரும்பிய அவர் தனிமையில் இருக்காமல், காவல்துறை, மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு உணவு கொடுத்துள்ளார். மேலும், அந்த நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வந்துள்ளார். இதனிடையே, அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தமுறை அவருக்குக் கொரோனா பாசிட்டிவ் என வந்தது.

தன்னார்வலர்கள் நேரடியாக உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்த அடுத்த நாளே, ஒரு தன்னார்வலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தத் தன்னார்வலரின் உறவினர்கள், அவர் உணவு கொடுத்த போலீஸார் உட்பட அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஜி மருத்துவமனை அறிக்கை
பி.எஸ்.ஜி மருத்துவமனை அறிக்கை

இந்த நிலையில், அந்தத் தன்னார்வலர் இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கடந்த 13-ம் தேதி அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளனர். அதில், நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. ஒரே நபருக்கு இப்படி மாறுபட்ட ரிசல்ட்டுகள் வந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.ஜி மருத்துவமனை நிர்வாகிகள் அளித்துள்ள விளக்கத்தில், ``13-ம் தேதியிலிருந்து அவர் எங்களது மருத்துவமனையில்தான் இருக்கிறார். அவரின் மகன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கொரோனா சோதனை செய்தோம். பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. இதனால், அவருக்கு கோவிட் 19 தொற்று இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் இந்த பரிசோதனையின் உண்மைத்தன்மை 60-70 சதவிகிதம்தான். ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று இருக்கிறதா.. இல்லையா என்று அறிவிப்பதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

கோவை
கோவை

அதை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எங்களது பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்ததன் மூலம், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சொல்லவோ, வீட்டுக்கு அனுப்பவோ முடியாது. நாங்கள் செய்த சோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது, இதனால், இ.எஸ்.ஐ பரிசோதனை முடிவு மாறாது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறோம். அவர் வீட்டுக்குத் திரும்பி மீண்டும் தன்னார்வப் பணிகளில் ஈடுபடுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை கோவை மாவட்ட துணை இயக்குநர் ரமேஷ், ``இரண்டு பரிசோதனை முடிவுகளுமே மைக்ரோ லேப் என்னும் ஒரே இடத்தில்தான் வழங்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவருக்கு, ஒரு முறை கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால், அவருக்கு மீண்டும் 14 நாள்கள் கழித்துதான் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, அவர்கள் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அடுத்தடுத்து உடனடியாக சோதனை செய்தால் சில நேரங்களில் மாறுபட்ட முடிவுகள் வரும். தற்போதைய சூழ்நிலைக்கு அவருக்கு மேலும் 14 நாள்களுக்கு சிகிச்சையளிக்கக் கூறியுள்ளோம்.

கோவை
கோவை

14 நாள்களுக்குப் பிறகு கொரோனா பரிசோதனை செய்வோம். அதில் நெகட்டிவ் என்று வந்தால், 24 மணி நேரம் கழித்து மீண்டும் கொரோனா பரிசோதனை செய்வோம். அதிலும் நெகட்டிவ் என்று வந்தால், எக்ஸ்ரே எடுப்போம். அதிலும், நிமோனியா அறிகுறி இல்லை என்று வந்தால் மட்டுமே விதிமுறைப்படி டிஸ்சார்ஜ் செய்வோம். வீடு திரும்பிய பிறகு, அங்கும் அவர் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறைதான் தன்னார்வலருக்கும் தொடரும்” என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு