Published:Updated:

`40 பேருக்கு 3 பாத்ரூம்; 5 அறைகள் மட்டுமே!' -சர்ச்சையாகும் கொரோனா தடுப்பு முகாம்களின் நிலை?! #Video

முகாம்

`எல்லோரும் நெருக்கமாக உலாவுவதால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், என்ன நடக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.'

`40 பேருக்கு 3 பாத்ரூம்; 5 அறைகள் மட்டுமே!' -சர்ச்சையாகும் கொரோனா தடுப்பு முகாம்களின் நிலை?! #Video

`எல்லோரும் நெருக்கமாக உலாவுவதால் நான் மிகவும் கவலைப்படுகிறேன். பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், என்ன நடக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.'

Published:Updated:
முகாம்

மற்ற நாடுகளைப்போலவே இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 129 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டிலிருந்து பயணிகள், வெளிநாடுகளில் தாயகம் திரும்பிய இந்தியர்கள் மூலமாக வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள வெளிநாடுகளில் பயணிகள் இந்தியா வர தடை விதித்துள்ளது மத்திய அரசு. அப்படி வர வேண்டும் என்றால் அந்த நாட்டின் மருத்துவர்களிடம் கொரோனா தொற்று இல்லை என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

அதேநேரம் இந்தியா திரும்புபவர்களை முகாமுக்கு அழைத்துச் சென்று 14 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த 14 நாள்களில் கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவர். இதற்காக ஒவ்வொரு சர்வதேச விமான நிலையம் அருகிலும் தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படி ஏற்படுத்தப்பட்ட முகாம்கள் சுகாதாரம் அற்றவையாக இருக்கின்றனவா என்ற சந்தேகத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது இந்த முகாமில் தங்கியுள்ள ஒரு பெண் வெளியிட்டுள்ள வீடியோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

21 வயதான மாணவி ஒருவர் நேற்று ஸ்பெயினிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார். ஸ்பெயினில் உள்ள பில்பாவோவிலிருந்து புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர், டெல்லியின் துவாரகா போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள அரசு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் 40 பேர் அந்தப் பயிற்சி நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், 40 பேர் தங்கியுள்ள அந்த முகாமில் ஐந்தே படுக்கை அறைகள், மூன்று பாத்ரூம்கள் மட்டும்தான் உள்ளன. அதுவும், அந்த பாத்ரூம்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதைத்தான் அவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

`40 பேருக்கு 3 பாத்ரூம்; 5 அறைகள் மட்டுமே!' -சர்ச்சையாகும் கொரோனா தடுப்பு முகாம்களின் நிலை?! #Video

இதுதொடர்பாகப் பேசியுள்ள நவ்யா, ``40 க்கும் மேற்பட்டவர்களுக்கு மூன்றே பாத்ரூம்களும் மற்றும் ஐந்து படுக்கை அறைகள் மட்டுமே உள்ளன. அதுவும் சரியாக சுத்திகரிக்கப்படவில்லை. அதிகாலை 1 மணி முதல் மதியம் 1 மணி வரை உணவு மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் நெருக்கமாகவே இருக்கிறோம். எல்லோரும் நெருக்கமாக உலாவுவதால் நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், என்ன நடக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். இதுதொடர்பாக அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தபோது சிறிதுநேரம் காத்திருக்குமாறு கூறினர்" என்று தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் தரையிறங்கி 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அவர்கள் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள டெல்லி அரசோ, பரிசோதனை செய்வதற்காக தனிமைப்படுத்தப்படும் பயணிகள் தங்குவதற்காக விமான நிலையத்தின் அருகிலேயே மூன்று சொகுசு விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஹோட்டல்களைப் பயன்படுத்த நினைப்பவர்கள் அதற்காக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது. எனினும் 182 அறைகளை ஒரு நிலையான விலையில் ஒதுக்குமாறு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மூன்று ஹோட்டல்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று டெல்லி அரசு கூறியுள்ளது.

`40 பேருக்கு 3 பாத்ரூம்; 5 அறைகள் மட்டுமே!' -சர்ச்சையாகும் கொரோனா தடுப்பு முகாம்களின் நிலை?! #Video

கொடிய கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்காக சுகாதார நிலையைப் பராமரிக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. இன்று காலை கூட மருத்துவமனைகளில் தூய்மையைப் பராமரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார். அப்படி இருந்தும் அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் இதுபோன்ற சுகாதாரமற்ற நிலை உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism