Election bannerElection banner
Published:Updated:

கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை

WHO
WHO

கொரோனாவின் முதல் அலையில் நான் உள்ளோம் வரும் காலத்தில் இதைவிட பெரிய அலைகள் வரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான நாட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,02,832- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,63,592 - ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,04,64,366 - ஆக அதிகரித்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் கொரோனாவின் முதல் அலையில்தான் தற்போது நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா வைரஸ் பருவகாலத்துக்கானது எனப் பலர் நினைக்கலாம் ஆனால், இது காய்ச்சல் போல இல்லாமல் அனைத்து வானிலைகளையும் விரும்புகிறது. இதற்கு முந்தைய காலங்களில் வெடித்த சுவாசம் தொடர்பான வைரஸ்கள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே பரவின. இப்படியிருக்கையில் கொரோனா மிக வித்தியாசமாக நடந்துக்கொள்கிறது. இனிமேல்தான் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் வைரஸைப் பற்றி கற்றுக்கொண்டிருந்தால் அது நம்மைப் பற்றி அறிந்துகொள்கிறது.

WHO: `கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது!’ - டெட்ரோஸ்

நாம் ஒருவருடன் நெருங்கிப் பழகும்போது நம்மிடம் இருக்கும் வைரஸ் பிறருக்கு செல்கிறது. கொரோனா இதையும் மிக அதிகமாக விரும்புகிறது. எனவே, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஒன்றுதான் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு சிறந்த வழியாக இருக்கும்” எனக் கூறிய அவர்,

வைரஸின் இரண்டாவது அலைத் தொடர்பான கேள்விக்கு, “நாம் தற்போது முதல் அலையில் இருக்கிறோம். இரண்டாவது அலை மிகவும் பெரியதாக இருக்கப்போகிறது. அது தொடர்ந்து அதிகமாகி பின்னர் குறையும். இதில் மிகவும் சிறந்த விஷயம் என்னவென்றால் மக்கள் நினைத்தால் வைரஸ் பரவலைக் குறைக்கலாம். ஒரே நேரத்தில் முதல், இரண்டாவது, மூன்றாவது அலை உருவாகும் என்ற விஷயங்களில் அர்த்தம் இல்லை. வருங்காலத்தில் பெரிய வெடிப்பு உள்ளது.

சமூக இடைவெளி
சமூக இடைவெளி

அமெரிக்காவின் கோடைக்காலத்தில் மிகப் பெரிய அளவிலான வைரஸ் பரவல் இருக்கும். நாங்கள் மிகப்பெரிய வெடிப்பு மற்றும் பூமத்திய ரேகை நாடுகளில் பரவலையும் பார்த்துள்ளோம் அதனால், காலநிலை இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் எனக் கூற முடியாது. கூட்டம் கூடுவதைத் தவிர்த்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக அழிக்க முடியும். மேலும், கைகழுவுதல், சுற்றுப்புற தூய்மை, முகமூடி அணிவது, இருமலின்போது வாயை மூடிக்கொள்வது ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திகொள்ளுங்கள். நீங்கள் யாரிடம் தொடர்பில் இருந்தீர்கள் என அறிந்து அவர்களையும் தனிமையில் இருக்க வைப்பது சிறந்தது” என்று அவர் பேசியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு