Published:Updated:

ஆக்‌ஷன் காமின்... கொரோனா தற்காப்புக்கு குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டிய சூப்பர் காமிக்ஸ்! #GoodParenting

கொரோனா
கொரோனா

கொரோனா விழிப்புணர்வுப் படக்கதை

கோவிட் - 19 கொரோனா பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை அறியாத நம் வீட்டுப் பிள்ளைகள், அது சார்ந்த சில சந்தேகங்களோடும் அலட்சியத்தோடும் இருப்பார்கள்.

கொரோனா பாதுகாப்பு
கொரோனா பாதுகாப்பு
அவர்களுக்குக் கொரோனா தடுப்பு குறித்து அறிவுறுத்தும் விதமாக மத்திய அரசு ஆங்கில வழியில் விழிப்புணர்வு படக்கதை ஒன்றை உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் கிடைக்கும் அந்தப் படக்கதையின் தமிழ் வடிவம், இங்கே உங்களுக்காக!

தமிழ் வடிவ விழிப்புணர்வுப் படக்கதை!

download

ஊரடங்குக் காலத்தில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கையாள முடியாமல் திணறுகின்றனர். இதற்கு ஓர் எளிய தீர்வு, அவர்களை என்கேஜ்டு ஆக வைத்திருப்பது. குழந்தைகளுக்கு என்ன செய்யப் பிடித்திருக்கிறது, என்ன செய்யப் பிடிக்கவில்லை என்று புரிந்துகொண்டு பெற்றோர் செயல்படுவது அவசியம்.

அடுத்த ஒரு மாதம் தனித்திருக்காவிட்டால், என்ன ஆகும் தெரியுமா? - எச்சரிக்கும் மருத்துவர்கள்! #LongRead
கொரோனா பாதுகாப்பு
கொரோனா பாதுகாப்பு

தினமும் நாள் முழுவதும், ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடப்பதென்பது, குழந்தைகளுக்குச் சிரமமான காரியம். ஆகவே அவர்கள் அவ்வப்போது ஹைப்பராக ரியாக்ட் செய்யக்கூடும். அதனால் குழந்தை பேசும்போது குறுக்கே பேசாமல் கவனியுங்கள். குழந்தைகளின் வார்த்தைகளை எப்போதும் உதாசீனப்படுத்தாதீர்கள். எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். இந்த நேரத்தில், உங்கள் அரவணைப்பு மட்டுமே குழந்தைகளுக்கான ஆறுதல்!

அடுத்த கட்டுரைக்கு