Published:Updated:

சேலம்: நிரம்பிய படுக்கைகள் - ஆம்புலன்ஸில்வைத்து கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை!

ஆம்புலன்ஸில் முதியவர் சிகிச்சை
ஆம்புலன்ஸில் முதியவர் சிகிச்சை ( எம். விஜயகுமார் )

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

``நோய் முற்றி, தனியார் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்கு வருபவர்களும், ஆக்ஸிஜன் வசதி தேவைப்படும் புதிய நோய்த் தொற்று உள்ளவர்களும் அரசு மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இங்கு படுக்கைகள் இல்லாததால், அவர்களுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.’’

ஆம்புலன்ஸுகளில் சிகிச்சை
ஆம்புலன்ஸுகளில் சிகிச்சை

இந்தியாவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. ஒரு நாளைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. உயிரிழப்புகளும் நான்காயிரத்தைக் கடக்கிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 30,000-ஐ தாண்டுவதோடு, ஒவ்வொரு நாளும் 250-க்கும் மேற்பட்டவர்கள் மரணிக்கிறார்கள்.

சேலத்தில் தொடர்ந்து 10 நாள்களாக ஒவ்வொரு நாளும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்குப் புதிய தொற்று ஏற்படுகிறது. அதனால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனாவுக்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களான தொங்கும் பூங்கா, சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மணியனூரிலுள்ள அரசு சட்டக் கல்லூரி, கருப்பூர் பொறியியல் கல்லூரி போன்றவையிலுள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

சேலம் ஜி.ஹெச்
சேலம் ஜி.ஹெச்

சேலம் மாவட்டம் முழுவதும் குறைந்தது 3,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் 850 படுக்கைகள் இருக்கின்றன. அதில் 600 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியோடு கொண்ட சிறப்பு படுக்கைகள். மற்றவை சாதாரண படுக்கைகள். இங்குள்ள அனைத்துப் படுக்கைகளும் நிறைந்துவிட்டன.

கோவை: `அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்' - இன்னும் கவனம் தேவை!

நோய் முற்றி, தனியார் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்கு வருபவர்களும், ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் தேவைப்படும் நோயாளிகளும் அரசு மருத்துவமனையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். இங்கு படுக்கைகள் இல்லாததால் மருத்துவமனை வளாகத்திலேயே ஆம்புலன்ஸுகளை நிறுத்திவைத்து, நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது பற்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தனபால்,`` சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் கெபாசிட்டி 600 பேர். ஆனால் தற்போது 1,100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி போன்ற மாவட்டங்களிலிருந்தும் இங்கு நோயாளிகள் வருவதால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸில் நொயாளிகளுக்கு சிகிச்சை...
ஆம்புலன்ஸில் நொயாளிகளுக்கு சிகிச்சை...

ஒரு நாளைக்கு 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகிறார்கள் என்றால், 60-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளிலிருந்தும், புதிய நோயாளிகளாகவும் வருகிறார்கள். இதை மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்துக்குக் கொண்டு சென்று விநாயகா மருத்துவக் கல்லூரியில் 250 படுக்கைகள், அன்னப்பூர்ணா மருத்துவக் கல்லூரியில் 250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர இரும்பாலையில் 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அனைத்தும் ஆக்ஸிஜன் வசதியோடு இருப்பதால் உயிர்ப்பலியை தடுக்க முடியும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு