Published:Updated:

தேனியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு!

கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஆய்வு செய்த கலெக்டர்
கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஆய்வு செய்த கலெக்டர்

தேனியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் சுமார் 100 முதல் 150 படுக்கை வசதி கொண்ட சிறப்பு கொரோனா வார்டு அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் தேனியில் 100 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஆய்வு செய்த கலெக்டர்
கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஆய்வு செய்த கலெக்டர்

தேனி நகரின் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்தில், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், உள்ள வசதிகள் குறித்து, மாவட்ட பொது சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். “தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி இதனை செய்திருக்கிறோம். மொத்தம் 100 படுக்கை வசதி கொண்டது. 3 அடி இடைவெளியில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெண்டிலேட்டர் கருவி உட்பட அனைத்து நவீனக் கருவிகளும் உள்ளன. நோயாளிகளுக்கான குடிநீர், கழிப்பறை வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளைக் கண்காணிக்க, போர்கால அடிப்படையில் சிறப்பு மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்றது.

`இடுக்கியில் கொரோனா கண்காணிப்பில் 54 பேர்..!' - அச்சத்தில் தேனி மக்கள் #corona

தற்போது எல்லாம் தயார் நிலையில் உள்ளன. கலெக்டர் நேரடியாக வந்து ஆய்வு செய்தார். சில கருத்துகளைத் தெரிவித்தார். அதனையும் செயல்படுத்தியுள்ளோம். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்படுகிறது” என்றார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ளது தேனி மாவட்டம். மாநில எல்லைகள் மூடப்பட்டாலும், கேரள வாசிகளின் அடிப்படைத் தேவைகளான காய்கறிகள், பால், முட்டை ஆகியவை தினமும் தேனியில் இருந்துதான் செல்கின்றன.

கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஆய்வு செய்த கலெக்டர்
கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டை ஆய்வு செய்த கலெக்டர்
`ஹை-டெக் அலுவலகம் டு தென்னந்தோப்பு..பெங்களூரு டு தேனி!' -கொரோனா அச்சத்தால் இடம்பெயர்ந்த ஐடி நிறுவனம்

இடுக்கி மாவட்டத்தில் கொரோனா அச்சத்தால், வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணைக்கை அதிகரித்துவரும் நிலையில், கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு