Published:Updated:

`ஏப்ரலில் 28,395... இப்போது 50’ - டெல்லியில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று!

டெல்லியில் ஏப்ரல் மாதம் உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து குறைந்துவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. டெல்டா வகை கொரோனா பரவல்தான் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த டெல்டா வகை வைரஸ் உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.

கொரோனா
கொரோனா

தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் பெரும் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஏப்ரல் 20-ம் தேதி அன்று 28,395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 277 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் அந்த காலகட்டத்தில் பெரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் நீண்ட நெடும் வரிசையில் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் காட்சியையெல்லாம் நாம் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்போம். டெல்லியில் ஆக்சிஜன் தேவை தினசரி சராசரி 700 டன் என்ற அளவுக்குச் சென்றது.

நாளொன்றுக்கு இறப்புகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 என்ற விகிதத்திலிருந்ததால், டெல்லியிலிருந்த பெரும்பாலான மயானங்கள் இரவு பகலாகத் தொடர்ந்து எரிந்துகொண்டேதான் இருந்தன. பூங்காக்களெல்லாம் எரியூட்டும் இடங்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஒருகட்டத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல், வென்டிலேட்டர் கிடைக்காமல், படுக்கைகள் கிடைக்காமல் நிலைமை கைமீறிப் போகவே செய்வதறியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருந்த நிலை உருவாகியிருந்தது. டெல்லி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

டெல்லி
டெல்லி
reutters

டெல்லி அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை அடுத்து அதிகரித்துக் காணப்பட்ட கொரோனா தொற்று, கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்துவந்தது. ஏப்ரல் மாதத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று தற்போது நிலவரப்படி 50 என்ற எண்ணிக்கையில் குறைந்திருக்கிறது. அதோடு, கொரோனா தொற்றால் ஒருவர் கூட இறக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. டெல்லி முழுவதும் 468 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1.12 கோடி நபர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு: இரவு பகலாக எரியும் சடலங்கள்; நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு