Published:Updated:

`தனிமைப்படுத்தாதவர்கள் குறித்து போலீஸுக்குத் தகவல் கொடுங்கள்!' - அரசின் 9 டிப்ஸ்கள் #FightCOVID19

கொரோனா
கொரோனா

`உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் நடமாடினால் அதை உடனடியாகக் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கவும்' என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள 9 டிப்ஸ்களை தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

1. கொரோனா வைரஸ் (கோவிட் 19) நோய்த் தடுப்பு என்பது உலகளவில் சவாலாக உள்ளது. அடிக்கடி கைகளைக் கழுவுவதன் மூலம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்

2. கொரோனா (கோவிட் 19) ஒரு பேரிடர். இந்தப் பேரிடரிலிருந்து நம்மை நாமே சமூகவிலகலைக் கடைப்பிடித்து காத்துக்கொள்ள வேண்டும்.

அரசின் கொரோனா டிப்ஸ்கள்
அரசின் கொரோனா டிப்ஸ்கள்

3. நாம் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தாலோ பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பில் இருந்தாலோ நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 14 நாள்கள் நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது அதை மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு நாம் உதவுகிறோம்

4. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் நடமாடினால் அதை உடனடியாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்கவும்.

5. எந்த அறிகுறியும் இல்லாமல் கூட உங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகமாகக் கூட்டமாக சேர்வதைத் தவிர்க்க வேண்டும்.

6. தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும்

கொரோனா
கொரோனா

7. குழந்தைகளையும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையும் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்

8. சர்க்கரை நோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்குள்ளானவர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்

9. ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.

இந்த 9 டிப்ஸ்களை பொதுமக்களைக் கடைப்பிடிக்கும்படி சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். அதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு