Published:Updated:

CoronaUpdates: இந்தியாவின் இளைய கொரோனா பாதிப்பாளர்... நலம்பெறுகிறது 3 வயது குழந்தை!

corona
corona

மார்ச் 9 அன்று, குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்ட, எர்ணாகுளத்தில் உள்ள கலமசெரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாகப் பரவ, இதுவரை இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 3 வயது குழந்தைதான் நாட்டிலேயே இளைய கொரோனா பாதிப்பாளராக இருந்தது.

குழந்தை
குழந்தை
Representational Image

இந்நிலையில், அக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட ஒன்பதே நாள்களில், 'கொரோனா நெகட்டிவ்' என இப்போது அதற்கு ரிசல்ட் வந்திருப்பது மகிழ்ச்சிகரமான செய்தியாக உள்ளது.

கடந்த மார்ச் 7-ம் தேதி, இத்தாலியிலிருந்து துபாய் வழியாக இந்தியா வந்திறங்கியது, சம்பந்தப்பட்ட 3 வயது குழந்தையின் குடும்பம்.

`பயணங்களைத் தவிருங்கள் ப்ளீஸ்!’ -பொதுமக்களுக்கு விஜயபாஸ்கர் வேண்டுகோள்

மார்ச் 9 அன்று, குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டு, எர்ணாகுளத்தில் உள்ள கலமசெரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டது. அடுத்த நாளே குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட, அவர்களுக்குப் பரிசோதனை செய்ததில், கொரோனா பாசிட்டிவ் என்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

corona
corona

இந்நிலையில், 3 வயது குழந்தைக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டு ஒன்பது நாள்களே ஆன நிலையில், தற்போது குழந்தைக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. இத்தாலிய உணவுகளை மட்டுமே சாப்பிடப் பழகியிருந்த குழந்தைக்கு, அதற்கு ஏற்றவாறு அதே வகை உணவுகளைக் கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் பராமரித்தது குறிப்பிடத்தக்கது.

'இன்னும் ஒரு டெஸ்ட் எடுக்கவேண்டி உள்ளது. அதிலும் ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்த பிறகு, குழந்தையின் பெயர் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் நடப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறார், கேரள முதலமைச்சர் பினராயி விஐயன்.

corona
corona

கோவிட்-19 பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கேரளாவில் எக்ஸ்பர்ட் கமிட்டி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறியிருக்கிறார் முதல்வர். கேரளாவில் வெள்ளம் வந்தபோது வங்கிகள் உதவியதைப்போல, இந்த நேரத்திலும் வட்டி விகிதத்தைக் குறைத்து லோன்களை அடைக்கும் அவகாசத்தை நீட்டித்து, மக்கள் நலனுக்காக ஒத்துழைக்க முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு