Election bannerElection banner
Published:Updated:

`கோவாக்சின் தடுப்பூசிக்கு 81% செயல்திறன்!' - ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்

COVAXIN
COVAXIN

புனே தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

ஒருவழியாக கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை முடிவை வெளியிட்டுவிட்டது பாரத் பயோ டெக் நிறுவனம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டுக்கும் `அவசர பயன்பாடு' என்ற அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. மூன்றாம் கட்ட பரிசோதனைகள் முடிவுகள் இல்லாமல், இப்படி அனுமதி அளித்ததற்கு மருத்துவர்கள், மருத்துவச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

COVID-19 vaccine delivery system in New Delhi
COVID-19 vaccine delivery system in New Delhi
AP Photo/Altaf Qadri

``கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் உள்ளன. அந்தத் தடுப்பூசிக்கு இரண்டாம் தவணை போட்ட பிறகு, 70 சதவிகித செயல்திறன் உள்ளது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசிக்கு எவ்வித தரவுகளும் இல்லை. இப்படி போதிய பரிசோதனை முடிவுகளின்றி இந்தத் தடுப்பூசியை செலுத்துவது ஆபத்தானது" என்றும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், புனே தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 25,800 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றி பாரத் பயோ டெக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை போட்டுக் கொண்டவர்களிடம் 81 சதவிகிதம் செயல்திறன் நிரூபிக்கப் பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ், கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் அனைத்துக்கும் எதிராகவும் குறைந்த காலத்துக்கு இது செயலாற்றும் (Interim Efficacy) என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Corona Vaccine
Corona Vaccine
AP Illustration/Peter Hamlin
கட்டாய தடுப்பூசி... கதறும் டாக்டர்கள்... அரசாங்கத்தின் கொரோனா குத்து!

தொடரும் பரிசோதனை!

``இருந்தாலும் கோவாக்சின் தடுப்பூசி பற்றிய கூடுதல் தரவுகளைப் பெறுவதற்காகப் பரிசோதனைத் தொடர்ந்து நடைபெறும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 130 பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் வரை பரிசோதனை நடைபெறும்" என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு