Published:Updated:

கொரோனா: ஓயாமல் கேட்கும் ஆம்புலன்ஸ் சத்தம்! - நெல்லையில் அதிகரிக்கும் நோய்த் தொற்று 

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ் ( Representational Image )

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. சாலைகளில், நோயாளிகளுடன் வரும் ஆம்புலன்ஸ் சத்தம் அடிக்கடி கேட்கிறது.   

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், நோய் பரவல் அதிகரித்தபடியே இருப்பது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாகத் திறக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன.

இரு டாக்டர்களுக்கு கொரோனா; தப்பாத ஆட்சியர் அலுவலகம்! -அதிர்ச்சிகொடுத்த நெல்லை நிலவரம்

கடந்த இரண்டு வாரமாக நெல்லை மாவட்டத்தில் நோய் பரவும் வேகம் அதிகரித்தபடியே இருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 700 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரு தனியார் மருத்துவமனைகள், மூன்று சிறப்பு மையங்கள் ஆகிய இடங்களில் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

ஒரு பக்கம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவப் பணியாளர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிவரும் சோகம் நிகழ்கிறது. ஏற்கெனவே 10-க்கும் அதிகமான டாக்டர்கள் குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் என 25-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்த் தொற்று அதிகரிப்பால் சாலைகளில் ஆம்புலன்ஸ் சத்தம் அடிக்கடி கேட்கிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகக் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் சத்தம் சாலைகளிலும் மருத்துவமனைக்கு அருகிலும் எப்போதும் கேட்கிறது. அது பொதுமக்களை அச்சம் அடைய வைத்திருக்கிறது.

representational image
representational image

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைக் கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. அத்துடன் போதிய இடவசதி இல்லாமலும் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு