Published:Updated:

`லாக்-டவுனில் 19 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள்; ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்து!’ #CoronaUpdate

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகளில் முழுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்
மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்

இதுவரை இந்தியாவில் 415 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 7 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. உயிரிழந்தவர்களில் சிலருக்கு ஏற்கெனவே சில நோய்கள் இருந்துள்ளது. 12 ஆய்வகங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கிவிட்டன. இந்த 12 ஆய்வகங்களுக்கும் நாடு முழுவதும் 15,000 சேகரிப்பு மையங்கள் உள்ளன” என்றனர்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்துப் பொருளை வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்குதான் இந்த ஹைடிராக்சிகுளோரோகுயின் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டாவதாக, நோயாளிகளை வீட்டில் வைத்து பராமரிக்கும் நபர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. நோய்த்தடுப்புக்காக மட்டுமே இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது” என விளக்கமாகக் கூறினர்.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விவரங்களை தெரிவித்தனர். ``சண்டிகர், டெல்லி, கோவா, ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து. ராஜஸ்தான், உத்தரகாண்ட், மேற்குவங்கம், லடாக், ஜார்க்கண்ட், அருணாசலப்பிரதேசம், பீகார், திரிபுரா, தெலங்கானா, சட்டீஸ்கர், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு