Published:Updated:

`நண்பன்' பட ஸ்டைலில் வீடியோ கால் மூலம் பிரசவம்... இறந்தே பிறந்த குழந்தை! என்ன நடந்தது?

குழந்தை - சித்திரிப்பு படம் ( Photo by Omar Lopez on Unsplash )

பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டதால், டாக்டர் ஒருவருக்கு செவிலியர்கள் தகவல் தெரிவிக்கவே, அவர் வீடியோ காலில் செவிலியர்களுக்கு பிரசவம் பற்றி எடுத்துக் கூற, அதன்படி பிரசவம் பார்த்துள்ளனர். ஆனால், குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் நீடித்தது.

`நண்பன்' பட ஸ்டைலில் வீடியோ கால் மூலம் பிரசவம்... இறந்தே பிறந்த குழந்தை! என்ன நடந்தது?

பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டதால், டாக்டர் ஒருவருக்கு செவிலியர்கள் தகவல் தெரிவிக்கவே, அவர் வீடியோ காலில் செவிலியர்களுக்கு பிரசவம் பற்றி எடுத்துக் கூற, அதன்படி பிரசவம் பார்த்துள்ளனர். ஆனால், குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் நீடித்தது.

Published:Updated:
குழந்தை - சித்திரிப்பு படம் ( Photo by Omar Lopez on Unsplash )

சில வருடங்களுக்கு முன், விஜய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த `நண்பன்' படத்தில் ஒரு காட்சி வரும்... பிரசவ வலியில் துடிக்கும் ஒரு பெண்ணுக்கு, இன்ஜினீயரான விஜய், பிரசவம் பார்ப்பார். வீடியோ காலில் மருத்துவர் வழிநடத்த, அவர் சொல்வதைக் கேட்டு பிரசவம் பார்ப்பார் விஜய். குழந்தையும் நல்லபடியாக பிறக்கும். அது சினிமா... அதனால் சுபமாக முடிந்தது. அதே மாதிரியான ஒரு நிகழ்வு நிஜத்தில் நடந்து, சோகத்தில் முடிந்துள்ளது.

மதுராந்தகம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்தே பிறந்ததற்கு வீடியோகால் மூலம் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததே காரணம் என்று கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார் குப்பத்தைச் சேர்ந்தவர், எலெக்ட்ரீஷியன் முரளி. இவரின் மனைவி புஷ்பா (33). தம்பதிக்கு ஏற்கெனவே 2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், 2வது பிரசவத்துக்காக கடந்த 19-ம் தேதி காலையில் புஷ்பாவை, இல்லீடு பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

புஷ்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அழைத்து வருமாறு அங்கிருந்த டாக்டர்கள் கூறி, திருப்பி அனுப்பினர். பிற்பகலில் மீண்டும் பிரசவ வலி உண்டாகவே, இல்லீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புஷ்பாவை மீண்டும் அழைத்துச் சென்றனர். அப்போது பணியில் டாக்டர் இல்லாத நிலையில், அங்கிருந்த 3 செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டதால், டாக்டர் ஒருவருக்கு செவிலியர்கள் தகவல் தெரிவிக்கவே, அவர் வீடியோ காலில் செவிலியர்களுக்கு பிரசவம் பற்றி எடுத்துக் கூற, அதன்படி பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவம் (Representational Image)
பிரசவம் (Representational Image)

ஆனால், குழந்தை பிரசவிப்பதில் சிக்கல் நீடித்தது; அத்துடன் புஷ்பாவின் உடல் நிலையும் மேலும் மோசமாகவே, மேல்சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே புஷ்பாவுக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவின் குடும்பத்தினர், அவரை மருத்துமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இந்தத் தகவலை அறிந்து ஆவேசமடைந்த உறவினர்கள், டாக்டர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்து பிறந்ததாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், பணி நேரத்தில் இல்லாத டாக்டர் பாபு என்பவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் மதுராந்தகத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.