Published:Updated:

‘டெல்டா ப்ளஸ்’ கொரோனா: தமிழ்நாடு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்! - எச்சரிக்கும் நிபுணர்கள்

கொரோனா வைரஸ்

தமிழகத்தில், இந்தியாவில் 2-ம் கொரோனா அலைக்கு முக்கியக் காரணம் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்பதை நாம் நன்கறிவோம்.(B.1.617 எனப்படும் டெல்டா வகை வைரஸ்). தமிழகத்தில் இதன் தாக்கம் 77% என்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

‘டெல்டா ப்ளஸ்’ கொரோனா: தமிழ்நாடு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்! - எச்சரிக்கும் நிபுணர்கள்

தமிழகத்தில், இந்தியாவில் 2-ம் கொரோனா அலைக்கு முக்கியக் காரணம் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்பதை நாம் நன்கறிவோம்.(B.1.617 எனப்படும் டெல்டா வகை வைரஸ்). தமிழகத்தில் இதன் தாக்கம் 77% என்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

Published:Updated:
கொரோனா வைரஸ்

ஓதமிழக அரசின் நிபுணர்குழுவிலுள்ள முக்கிய மருத்துவரான பிரப்தீப் கவுர், `மூலக்கூறு ஆய்வுகளை உரிய அளவில் செய்யாமல்விட்டதே உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை ஆரம்பத்திலேயே நாம் கண்டறியாமல் போகவும், தீவிர நோய்ப் பரவலுக்கும் காரணமானது’ என்றும், `பொதுமுடக்கத்தின் (Lockdown) தேவையே அதனால்தான் வந்தது’ என்றும் தெளிவுபடக் கூறுகிறார். தற்போதைய அரசுக் குழுவிலுள்ள 'Dr.ஜெயப்பிரகாஷ் முலியில் (Jayaprakash Muliyil), மூலக்கூறை ஆய்வுசெய்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

டெல்டா வைரஸ், தாய் வைரஸைக் காட்டிலும் 50% அதிகமாகப் பரவும் தன்மைகொண்டது. உள்நோயாளியாகச் சேர்க்க வேண்டிய தேவையும் நான்கு மடங்கு அதிகம் என்பது ஆய்வு வாயிலாகத் தெரியவந்துள்ளது.

3-ம் அலை தமிழகத்தில் வர மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இருக்கும் என்றும், அது வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் பிரப்தீப் கவுர் சொல்லி வருகையில், தற்போது இந்தியாவில் எட்டுப் பேர் டெல்டா ப்ளஸ் (டெல்டாவுடன், K417N மாற்றமும் கூடுதலாக உள்ளது) வைரஸால் பாதிப்படைந்தது உறுதியான நிலையில் அதில் மூன்று பேர் தமிழகத்தில் இருப்பதாக முடிவுகள் வெளிவந்துள்ளன. அவர்கள் எந்த மாவட்டம், நகர்ப்புறமா கிராமப்புறமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாதிப்பு மூன்று பேர்தானா, அதிகமாக இருக்குமா என்பதிலும் தெளிவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரப்தீப் கவுர் சொல்வதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரம் ஒரு முறையாவது மூலக்கூறு ஆய்வு குறிப்பிட்ட எண்ணிக்கையில் செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. தமிழக அரசு மூலக்கூறு ஆய்வை அதிகம் செய்து, பாதிப்புள்ள இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதுடன், தேவையான கட்டுப்பாடுகளையும் கொண்டுவருவது நல்லதாக இருக்கும். அதற்கு தமிழகத்தில் குறைந்தது ஓர் ஆய்வகமாவது வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தடுப்பூசிக்கு டெல்டா ப்ளஸ் சரியாகக் கட்டுப்படுவதில்லை என்பதைக் கருத்தில்கொண்டு மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்தியும், நோய் பாதித்தவர்களைப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து, அவர்களை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்துவதும்தான் சிறந்த தடுப்புப் பணியாக இருக்கும் என்பதை தமிழக அரசு உணர்ந்து, இப்போதே விழித்தெழுந்து சரியான திட்டமிடலோடு செயல்பட்டால்தான் 3-ம் அலையை சரியாகக் கையாள முடியும்.

மத்தியப்பிரதேம், போபாலில் டெல்டா ப்ளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சுகாதாரத்துறையும், அங்கு டெல்டா ப்ளஸ் வைரஸை உறுதிசெய்தபின், அது அங்கு 3-ம் அலைக்கு வித்திடலாம் எனும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. தமிழகமும் மகாராஷ்டிராவைப் பின்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் TPR (Test Positivity Rate) 10% மேல் இருப்பதால், பரிசோதனைகள் அளவைக் குறைப்பது அறிவியல்ரீதியாகச் சரியாக இருக்காது. மூலக்கூறு ஆய்வுகளையும் அதிகப்படுத்தியாக வேண்டிய தேவையும் உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமரைச் சந்தித்தபோது கொரோனா வைரஸ் குறித்து கோரிக்கைவைத்த நிலையில், மூலக்கூறு ஆய்வகத்தைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியதாகத் தெரியவில்லை. வலியுறுத்தினால், தமிழகம் நன்மை பெறும். தமிழகத்தில் ஒட்டுமொத்த அளவில் கொரோனா இறப்புகள் குறைந்தது போன்று இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் ஏற்படும் இறப்பு என கணக்கிட்டால் (CFR - Case Fatality Rate) கடந்த மூன்று வாரங்களுக்கு முன் 1.1% என இருந்தது, தற்போது 1.3% ஆக அதிகரித்துள்ளதால் டெல்டா ப்ளஸ் வைரஸ் குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

அரசு செயல்பட முன்வர வேண்டும்!

- மருத்துவர். வீ.புகழேந்தி