Published:Updated:

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கலாமா? #FightCovid-19

தகனம்
தகனம் ( Representational Image )

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இரண்டாவதாக உயிரிழந்த 68 வயது மூதாட்டியின் உடலைத் தகனம் செய்ய அங்குள்ள தகன மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் இதுவரை 7,166 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடலை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பம் நிலவுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் இரண்டாவதாக உயிரிழந்த 68 வயது மூதாட்டியின் உடலைத் தகனம் செய்வதற்கு அங்குள்ள தகன மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

Dead Body
Dead Body
Representational Image

இது தொடர்பான செய்தி ஒரு தொலைக்காட்சியில் வெளியான பிறகு, மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்புடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கொள்ளைநோய்களால் இறப்பவர்களின் உடலை எவ்வாறு கையாள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

அதில், `கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடலால் எவ்வித ஆபத்தும் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலான நுண்ணுயிரிகள் உயிரிழந்த உடலில் நீண்ட நேரம் வாழ்வதில்லை. சில விதிவிலக்குகள் உள்ளன. இவற்றில் காலரா, மூளைக்காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட சில நோய்களால் உயிரிழந்தவர்களின் உடல்களால் நோய் பரவலாம் என்பதால் அவற்றைக் கையாள வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Corona
Corona
Representational Image

எனினும் கொள்ளைநோய்களால் உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளும் ஊழியர்கள் தங்கள் சுய சுகாதாரத்தைப் பேண வேண்டும். உடலைக் கையாளும்போது கையுறை அணிய வேண்டும். ரத்தம் மற்றும் உடலின் திரவங்களைத் தொட வேண்டிய நிலை வந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்த சர்வதேச கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலந்துகொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியிடம், கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கலாமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

WHO chief scientist Dr.Sowmya Swaminathan
WHO chief scientist Dr.Sowmya Swaminathan
`ஹை-டெக் அலுவலகம் டு தென்னந்தோப்பு..பெங்களூரு டு தேனி!' -கொரோனா அச்சத்தால் இடம்பெயர்ந்த ஐடி நிறுவனம்

அதற்கு அவர், ``கொரோனா வைரஸ் மனித உடலிலிருந்து உற்பத்தியாகும் திரவங்களலிருந்து பரவும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த வைரஸ் ஒருவர் தும்மும்போதோ இருமும்போதே தெறிக்கும் எச்சில் துளியிலிருந்துதான் பரவும். ஒருவர் உயிருடன் இருந்தால்தான் தும்முவதன் மூலமோ இருமுவதன் மூலமோ வைரஸைப் பரப்ப முடியும். அதனால் உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

பொதுவாகவே இதுபோன்ற நேரங்களில் அனைவரும் சுய சுகாதாரத்தைப் பேணுவது சிறந்தது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு