Published:Updated:

தமிழத்தில் குறையும் கொரோனா தொற்று... இனியும் முகக்கவசம் கட்டாயம் தேவையா? - நிபுணர்கள் சொல்வதென்ன?!

முகக்கவசம் ( vikatan )

கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவதன் தேவைக் குறித்து மருத்துவ நிபுணர்கள், தமிழக சுகாதாரத்துறை கூறும் விளக்கம் என்ன?

தமிழத்தில் குறையும் கொரோனா தொற்று... இனியும் முகக்கவசம் கட்டாயம் தேவையா? - நிபுணர்கள் சொல்வதென்ன?!

கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முகக்கவசம் அணிவதன் தேவைக் குறித்து மருத்துவ நிபுணர்கள், தமிழக சுகாதாரத்துறை கூறும் விளக்கம் என்ன?

Published:Updated:
முகக்கவசம் ( vikatan )

கொரோனா பேரிடர்:

கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா பேரிடர் மொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டது. முதல் அலை, இரண்டாம் அலை என்று தொடர்கதையானது. இந்தியாவில் கொரோனா பேரிடரைப் பொறுத்தவரை இரண்டாம் அலை சமயத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள் பலரும் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காது, ஆக்ஸிஜன் கிடைக்காது அல்லாடியதை நாம் கண்முன்னே பார்த்தோம்.

கொரோனா பேரிடர்
கொரோனா பேரிடர்

தமிழகத்தில் மூன்றாம் அலை சமயத்தில் தொற்றின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கினாலும், இரண்டாம் அலை சமயத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் போல எதுவும் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது கொரோனா தடுப்பூசி தான். தற்போத நிலைமையில் தமிழகத்தில் நாளொன்று 40-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் மொத்தமாகவே கிட்ட 300 பேர் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எவ்வளவு பாதிப்பு:

உலகளவில் இதுவரை, (31.03.2021 நிலவரப்படி) 490,410,798 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 423,702,866 சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 61,67,247 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், அமெரிக்க முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் 43,025,775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42,490,922 பேர் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 5,21,211 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,84,31,89,377 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா பேரிடர் தொடங்கிய காலம் தொட்டு தற்போது வரை (31.03.2021) 34,52,825‬ பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 34,14,494 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். 6,55,97,835 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது என்று தமிழக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 10,16,88,617 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்:

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காரணமாக ஊரடங்கு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், மார்ச் 31-ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

இந்த அறிவிப்பையடுத்து, ஏப்ரல் 01-ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இல்லாத இயல்பு நிலைக்கு நாடு திரும்பியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வரை முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கின்றன.

கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் முகக்கவசம் அணிவது அவசியமா என்பது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜனிடம் பேசினோம். ``முகக்கவசம் அணிவது அவசியம் தான். நாம் இப்போது இருக்கும் இடத்துக்குத் தகுந்தாற்போல முகக்கவசம் அணியலாமா வேண்டாமா என்ற சூழலுக்கு வந்துவிட்டோம். அபராதம் விதித்து கட்டாயமாக முகக்கவசம் அணியச்சொல்லும் நிலையை நாம் கடந்துவிட்டோம்" என்றார்.

தேரணிராஜன்
தேரணிராஜன்

மேலும், ``வயதானவர்கள், நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் எந்த இடத்திலிருந்தாலும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். நான் சமீபத்தில் லண்டன் சென்றிருந்தேன். அங்குப் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. நாங்கள் மருத்துவமனையில் பணியாற்றுகிறோம். இங்கு அனைவருமே முகக்கவசம் அணிவது அவசியம் தான். அதுபோல மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் நாம் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். நமது பாதுகாப்பை நாம்தான் உறுதிசெய்யவேண்டும்" என்றார்.

தமிழகத்தில் முகக்கவசம் அணியவேண்டியதின் தேவை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``கொரோனா தொற்று முழுமையாகச் சரியாகிவிடவில்லை. இன்றும் தினசரி 40-க்கும் குறைவானோருக்குப் புதிதாகத் தொற்று உறுதிசெய்யப்படுகிறது. தற்போது மலேசியா, சிங்கப்பூரில் நாளொன்றுக்கு பத்து ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது" என்றார்.

மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசியவர், ``இன்னும் இரண்டு மூன்று மாத காலங்களுக்குப் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். அதோடு, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகமிக அவசியம். தமிழகத்தில் மக்களின் நன்மைக்காக ஏற்கெனவே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுவிட்டன. முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம். அதுதான் மக்களைத் தொற்றிலிருந்து பாதுகாக்கும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism