Published:Updated:

`சானிடைஸரைத் துரத்த வேண்டாம்; அதைவிட சோப் சிறந்தது!’ - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

கொரோனா
கொரோனா

கொரோனா அச்சத்தால் ஹேண்ட் சானிடைஸர் விலை அதிகரித்துள்ளது. ஆனால் சானிடைஸர்களை விடச் சாதாரண சோப் நல்ல பயன் தரும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில் இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்குப் பரவி உலக மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 93- ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் இரண்டாகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாகவும் உள்ளது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வாக முதலில் கூறப்படுவது கைகளைக் கழுவ வேண்டும் என்பதுதான். ‘கொரோனா வைரஸ் ஒரு `உறையிடப்பட்ட’ (enveloped) வைரஸ் ஆகும். அது வெளிப்புறத்தில் லிப்பிட் சவ்வு அடுக்கைக் கொண்டுள்ளது. அடிப்படையில், இது ஒரு கொழுப்பு அடுக்கால் சூழப்பட்டுள்ளது. சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளைக் கழுவினால் இந்த க்ரீஸ் கொழுப்பு அடுக்கைச் சோப்பு கரைத்து வைரஸைக் கொல்லும் திறன் கொண்டுள்ளது’ என ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உயிர் இயற்பியல் பேராசிரியர் டாக்டர்.கரென் பிளம்மிங் தெரிவித்துள்ளார். இதையே அனைத்து நாட்டு மருத்துவர்களும் வலியுறுத்துகிறார்கள். இதன் காரணமாகவே பொதுமக்கள் கைகழுவ வேண்டும் என்பது முதன்மையானதாகக் கூறப்படுகிறது.

`உழைப்பின் வலி; நிம்மதிப் பெருமூச்சு!’ -இணையத்தைக் கவர்ந்த சீன மருத்துவரின் புகைப்படம் #CoronaVirus

கொரோனா தொற்று அதிகமானதும் இந்தியா உட்பட பல நாடுகளில் ஹேண்ட் சானிடைஸர்களின் உபயோகம் அதிகரித்துள்ளது. மேலும் சில இடங்களில் சானிடைஸர் பதுக்கல் நடைபெறுவதால் இதன் விலை உச்சத்தை எட்டியுள்ளது. சானிடைஸர் மற்றும் முகமூடி ஆகிய இரண்டும் அடுத்த நூறு நாள்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்த்துள்ளது மத்திய அரசு.

சானிடைஸர்
சானிடைஸர்

அதே நேரத்தில் இந்தியாவில் சானிடைஸர் மற்றும் முகமூடிகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 15 நாள்களுடன் ஒப்பிடும்போது சானிடைஸர் 559 சதவிகிதமும் முகமூடிகளின் விற்பனை 334 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் இதன் தேவை அதிகமாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மூடப்படும் சிறப்பு மருத்துவமனைகள்?; அதிபரின் வுகான் பயணப் பின்னணி! -  மீண்டுவிட்டதா சீனா? #Corona

இந்நிலையில் பொதுமக்கள் யாரும் சானிடைஸர் பின்னால் ஓட வேண்டும் சாதாரணமாக நாம் பயன்படுத்தும் சோப்பே வைரஸை விரட்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சானிடைஸரைத் துரத்த வேண்டாம். நம் வீட்டில் பயன்படுத்தும் சோப்பே சிறந்தது! ஆல்கஹால் நிறைந்த சானிடைஸர் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதைவிட சோப், வைரஸைக் கொல்லும் அதிக திறன் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் வெளியிடங்களில் பல மணி நேரம் இருக்கும். அதனால் சானிடைஸர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சோப்புடன் ஒப்பிடுகையில் சானிடைஸரின் வேகம் குறைவுதான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தினமும் பலமுறை கைகளைக் கழுவுங்கள் என்று கூறி அதற்கான அறிவியல் காரணத்தையும் புகைப்படத்துடன் விளக்கியுள்ளார் அமைச்சர்.

அடுத்த கட்டுரைக்கு