Published:Updated:

`கொரோனா தொற்றிலிருந்து மருத்துவர்களைக் காக்கும் கவசம்!' -களமிறங்கிய DRDO

பாதுகாப்பு உடை
பாதுகாப்பு உடை

இந்தப் பாதுகாப்பு உடையானது 7,000 ரூபாய் மதிப்பில், கொல்கத்தா மற்றும் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் சார்பில் நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் கொடூரத் தாக்குதல் நடத்தி வருகிறது. நாடு முழுவதிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் எனப் பலரும் கொரோனா எனும் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

Corona
Corona

இருப்பினும், வைரஸ் பரவலின் வேகம் கட்டுக்குள் வராத சூழலே தற்போதுவரை நிலவிவருகிறது. இந்நிலையில், நாட்டின் பல இடங்களில் இக்கட்டான சூழலில் பணியாற்றி வரும் மருத்துவர்களில் சிலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த அவலங்களைப் போக்கும்விதமாக, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO - The Defence Research and Development Organisation) கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் களம் கண்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார அதிகாரிகள் எனப் பலரையும் தொற்றிலிருந்து காக்கும்விதமாக பாதுகாப்பு உடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

பாதுகாப்பு உடை
பாதுகாப்பு உடை

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டிஆர்டிஒ நிர்வாகம், கதிரியக்க அவசர காலங்களில் மருத்துவ ஊழியர்களுக்கு அவற்றின் பாதிப்பை தவிர்ப்பதற்காக வழங்கப்படும் பாதுகாப்பு ஆடைகள், கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்கப் போராடும் மருத்துவ, சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் காக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா `ஹாட்ஸ்பாட்’ நிஜாமுதீன்.. 16 நாடுகள்..! -கறுப்புப்பட்டியலில் 300 வெளிநாட்டினர்? #Nizamuddin

இந்தப் பாதுகாப்பு உடையானது 7,000 ரூபாய் மதிப்பில், கொல்கத்தா மற்றும் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் சார்பில் நாள் ஒன்றுக்கு 10,000 என்ற எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது உலகத் தரத்தில் இருப்பதோடு, ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க்கு
மாஸ்க்கு

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டைக் காக்கும் பணியில் களம் கண்டிருக்கும் டிஆர்டிஓ சார்பில், தினமும் 10,000 என்ற எண்ணிக்கையில் 5 அடுக்குகளைக் கொண்ட n95 ரக மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு வென்டிலேட்டர் கருவியை பலர் பயன்படுத்தும் வகையிலான வடிவமைப்புக் கொண்ட வென்டிலேட்டர் கருவிகள் தலா 4 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு