Published:Updated:

`கொரோனா வைரஸைக் கண்டறிய 15 நிமிடங்கள் போதும்’ -இந்தியாவில் புதிய பரிசோதனை

கொரோனா பரிசோதனை
News
கொரோனா பரிசோதனை

இந்தப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை.

கொரோனா வைரஸ் தொற்றை வெறும் 15 நிமிடங்களில் கண்டறியும் புதிய பரிசோதனை விரைவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Standard Q COVID-19 Ag antigen detection test என்ற பரிசோதனை, தற்போது பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையின் எளிமைப்படுத்தப்பட்ட வகையைச் சேர்ந்தது.

covid-19 test
covid-19 test

தென்கொரியாவில் அமலிலுள்ள இந்தப் பரிசோதனை முறையை இந்தியாவிலும் செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக கொரோனோ ஹாட்ஸ்பாட், நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையைப் போன்றே இந்தப் பரிசோதனைக்கு மூக்கு, தொண்டையிலிருந்து சளி மாதிரியை எடுக்க வேண்டும். பரிசோதனை கிட்டிலேயே சளி மாதிரியை எடுத்து நோயை உறுதி செய்யும் ரசாயனக் கலவையும் இருக்கும். சளி மாதிரியை ரசாயனத்தில் இட்ட 15 நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும். இந்தப் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை.

Dr.Jayashree Sharma
Dr.Jayashree Sharma

பரிசோதனை கிட்டை ஐ.சி.எம்.ஆர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் பரிசோதித்துள்ளது. இது ரேபிட் டெஸ்ட்டைவிட மாறுபாடானது. ரேபிட் டெஸ்டில் உடலில் ஆன்டிபாடி உருவாகியிருந்தால் மட்டுமே நோயைக் கண்டறிய முடியும். மேலும், அது ரத்தப் பரிசோதனை முறையாகும். Standard Q COVID-19 Ag antigen detection பரிசோதனையானது வைரஸின் தொற்றை நேரடியாகக் கண்டறியக்கூடியது என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக வைரலாஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மாவிடம் பேசினோம், ``பரிசோதனை முடிவுகளை வெறும் கண்களாலேயே சில நிமிடங்களில் கண்டறிந்துவிட முடியும். ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையைக் காட்டிலும் இதில் உணர்திறன் சற்று குறைவுதான். இதில் பாசிட்டிவ் முடிவு வந்துவிட்டால் 100 சதவிகிதம் நோய் உறுதி செய்யப்பட்டதுதான். ஆனால் நெகட்டிவ் முடிவு வந்து, நோயாளிக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தேவைப்படும்.

corona test result
corona test result

இந்தப் பரிசோதனை கிட்டின் விலை வெறும் ரூ.500 தான். தற்போது டெல்லியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த கிட்டை மருந்து நிறுவனங்கள் தயாரிக்கவுள்ளன. விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும். இந்த கிட்டை காய்ச்சல் கிளினிக் உள்ளிட்ட மருத்துவமனைகளில் வைக்கும்போது, நோயாளிகள் கொரோனா பரிசோதனைக்காக வேறு மையங்களைத் தேடிச் செல்லும் நிலை ஏற்படாது. அதன் மூலம் பிறருக்கு நோய் பரவும் வாய்ப்பும் குறையும்" என்றார்.