Published:Updated:

ஹிமாச்சல்: கிராமத்தில், ஒரே ஒருவரைத் தவிர அனைவருக்கும் கொரோனா... தொற்று பரவியது எப்படி?!

ஹிமாச்சல்
ஹிமாச்சல் ( Twitter/ @bistsanjay1961 )

இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தற்போது நிலவிவரும் கடும் குளிர் காரணமாக குலு பகுதிக்குச் சென்றுவிட்டனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவம் இன்னும் அடங்கவில்லை. ஆனால், கடந்த சில நாள்களாக, நாளொன்றுக்கு 50,000-க்கும் குறைவானவர்களே கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தநிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், ஸ்பிதி பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள தோரங் (Thorang) என்ற கிராமத்தில் வசித்துவரும் மக்களில், ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி ஹிமாச்சல மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பாதித்த தோரங் கிராமம், ஹிமாச்சல் பிரதேஷ்
கொரோனா பாதித்த தோரங் கிராமம், ஹிமாச்சல் பிரதேஷ்
Twitter/ @MeBhavya
டெல்லியைவிட்டு வெளியேறிய சோனியா காந்தி... கோவாவில் வசிக்கத் திட்டம்! - என்ன காரணம்?

ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைந்துள்ள லாஹல்-ஸ்பிதி (Lahaul and Spiti) மாவட்டத்தில் இதுவரை 909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 425 பேர் மட்டுமே தற்போது கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இந்தநிலையில், கடந்த மாதம் லாஹல்-ஸ்பிதி மாவட்டத்திலுள்ள ரங்ரிக் (Rangrik) கிராமத்தில் 40 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. அந்த 40 பேரும் மணாலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அந்தத் திருமண நிகழ்ச்சி மூலமாகத்தான் 40 பேருக்கும் கொரோனா தொற்று பரவியது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் கூறினர்.

இந்தநிலையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம், லாஹல்-ஸ்பிதி மாவட்டத்திலுள்ள மற்றொரு கிராமமான தோரங் கிராமத்தில் வசித்துவரும் 42 பேரில், 41 பேருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ``கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தக் கிராமத்திலிருந்த ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை. இப்போது அதுவே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தற்போது நிலவிவரும் கடும் குளிர் காரணமாக குலு பகுதிக்குச் சென்றுவிட்டனர். இல்லையென்றால் இன்னும் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்'' என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

தோரங் கிராம மக்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ ராம் லால் மார்கண்டா (Ram Lal Markanda) கூறியிருப்பது பின்வருமாறு...

இந்தக் கிராம மக்கள், அண்மையில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கோயில் ஒன்றுக்கு வந்து செல்கின்றனர். அதுவும் கடந்த அக்டோபர் மாதத்தில் அடல் சுரங்கப்பாதை தொடங்கப்பட்ட பின்னர் இங்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதுதான், கொரோனா தொற்றே இல்லாத இந்தக் கிராமத்தில் தொற்று பரவியிருப்பதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
ராம் லால் மார்கண்டா, பா.ஜ.க எம்.எல்.ஏ
அடல் சுரங்கப்பாதை
அடல் சுரங்கப்பாதை
`உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை!'- அடல் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி #NowAtVikatan
மேலும் இது குறித்துப் பேசியிருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ``தோரங் கிராமத்துக்கு வரும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதுமே சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நடுத்தர வயதுடைய ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பில்லை. அவரும் பாதுகாப்பாக இருக்கிறார்'' என்று கூறியிருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரைக்கு