Published:Updated:

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!
பிரீமியம் ஸ்டோரி
பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

அது பலருக்கும் பழக்கமில்லைன்றதால பல ஆர்டர் கேன்சல் ஆகுது.

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

அது பலருக்கும் பழக்கமில்லைன்றதால பல ஆர்டர் கேன்சல் ஆகுது.

Published:Updated:
பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!
பிரீமியம் ஸ்டோரி
பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

கொரோனா காலத்திலும் சிலருக்கு ‘வெளிய போனாதான் பொழப்பு.’ குறிப்பாக உணவு, மளிகை மற்றும் தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் ஊழியர்கள். நோய்தாக்கும் அச்சத்தையும் மீறி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள், அவர்களில் சிலர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாமோதரன், அம்பத்தூர்

“எனக்கு 26 வயசாகுது. ரெண்டு வருஷமா ஸொமேட்டோல வேலை செய்றேன். பி.காம் முடிச்சும் வேலை கிடைக்காத எனக்கு, இந்த வேலையில ஒரு நாளுக்கு 1,000 ரூபாய் கிடைச்சது. ஆனா இப்ப 300 ரூபாய் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இருந்தாலும் நாள் முழுக்க ரோட்டில் நிக்குறோம். அப்பாவும் அம்மாவும் தினமும் வீட்டை விட்டுக் கிளம்பறப்ப தவிக்கிறாங்க. ஆனா வேற வழி தெரியல. இப்ப கொரோனா பயம் காரணமா கேஷ் பேமென்ட் இல்லை, ஆன்லைன் பேமென்ட் மட்டும்தான். அது பலருக்கும் பழக்கமில்லைன்றதால பல ஆர்டர் கேன்சல் ஆகுது.

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வங்க ஆர்டர் செஞ்சா ‘contactless delivery’ ஆப்ஷனை செலக்ட் பண்ணுவாங்க. அந்த ஆர்டரை நாங்க வெளியே வெச்சிட்டு கால் செஞ்சு சொல்லிடுவோம். வந்து எடுத்துப்பாங்க. ‘ஆரோக்கிய சேது’ ஆப் மூலமாவும் கொரோனா பாதிப்பு வீடுகளைத் தெரிஞ்சிக்கிறோம். ஆனா, கொரோனாவால் பாதிக்கப்பட்டது அவங்களுக்கே தெரியாம பலர் இருக்கறாங்க. டெலிவரி செய்றவங்கள்ளகூட அப்படி இருக்கலாம். பயத்தோடதான் வேலை பார்க்கிறோம். இப்ப பெட்ரோல் விலை 83 ரூபாயைத் தாண்டிடுச்சு. ஆனா, எங்களுக்கு கிலோமீட்டருக்கு வெறும் 5 ரூபாய்தான் கிடைக்கும். அதுவும் மூன்று கிலோமீட்டருக்குக் கூடுதலான பயணங்களுக்கு மட்டுமேன்றதால கட்டுப்படியாகலை. தினமும் கிடைக்கிற அந்த 300 ரூபாய் முக்கியன்றதால எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்குறோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

கணேசன், முகப்பேர்

‘`பல ஆண்டுகளாக அரிசி, தண்ணீர் கேன்கள், பால் விநியோகம் செய்துவருகிறேன். அத்தியாவசியப் பொருள்கள் டெலிவரி என்பதால், கொரோனா காலத்திலும் லீவ் இல்லை. நீண்டகால வாடிக்கையாளர்கள்கூட, தங்கள் பகுதிகளில் கொரோனா பாதிப்பு இருப்பதை போனில் சொல்லமாட்டார்கள். டெலிவரி செய்யச் சென்றால் ‘கொரோனா பாதித்த பகுதி’ போர்டு இருக்கும். வீட்டு வாசலிலேயே பொருள்களை வைத்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் வயதானவர்கள் இருக்கும் வீடுகளில் சில நேரங்களில் வீட்டுக்குள் சென்று தண்ணீர் கேன், அரிசி மூட்டைகளை வைத்துவிட்டு வருவேன். கொரோனாவால் பல வாடிக்கையாளர்களின் வேலை பாதிக்கப்பட்டி ருப்பதை நன்கறிவேன். எனவே, பொருள்களை வழங்கிவிட்டு, அவர்களால் எப்போது பணம் தர முடிகிறதோ அப்போது வாங்கிக்கொள்வேன். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வருகையில் குழந்தைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கும். அதனால் முடிந்தவரை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வேன். லேசாக இருமல் வந்தால்கூட பயம் வந்துவிடும். ‘நமக்கு எதுவும் ஆகாது’ என்று தைரியம் கொடுத்து அந்த பயத்தை விரட்டிவிடுவேன்.”

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

ராமசந்திரன், நாவலூர்

“ஸொமேட்டோவில் ஓஎம்ஆர் - நாவலூர்ப் பகுதியில் வேலை செய்றேன். வீட்டுல என் அப்பா, மனைவி, ரெண்டு குழந்தைகள்னு அஞ்சு பேர். சம்பாதிக்கும் ஒரே ஆள் நான்தான். எனக்கு 42 வயசுன்றதால கொரோனா அச்சம் கொஞ்சம் அதிகம்தான். வேறு வழியில்லை. தினமும் காலையில் தெர்மல் ஸ்கிரீனிங், மாஸ்க், கிளவுஸ், சானிட்டைசர்ன்னு பாதுகாப்பாதான் வேலையைத் தொடங்குறோம். இரவு எட்டு மணிவரை வேலை இருக்கும். வீட்டுக்குப் போனதும் யாரையும் தொடாம, தனிமைப்படுத்திக்குவேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையா ஒரு நாளுக்கு இரண்டு முறை கபசுரக் குடிநீர் மற்றும் இஞ்சி, மிளகுக் கஷாயம் குடிக்கிறேன். இந்த ஏரியாவில இருந்த ஐ.டி நிறுவனங்கள் மூடிட்டதால கம்மியாதான் ஆர்டர் வருது. ஒரு டெலிவரிக்கு 20 ரூபாய்ன்னு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 150 ரூபாய்தான் கிடைக்கும். இந்த ஏரியால நிறைய கொரோனா கேஸ் இருக்கு. ரிஸ்க்தான். வேற வழியில்லையே!’’

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

சாதிக் பாட்சா, கிழக்குக் கடற்கரைச் சாலை

‘`ஸ்விகியில் வேலைசெய்கிறேன். லாக்டௌனால் பலரும் சென்னையை விட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிட்டதால் ஆர்டர்கள் குறைந்துவிட்டன. இ-பாஸைக் காண்பித்தால் போலீஸார் அனுமதித்து விடுவார்கள். ஆனால், கொரோனா நோய்ப் பரவல் தடுப்புக் கட்டைகள், தகரங்கள் என்று தாண்டிச் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. வீட்டுக்கு வெளியே டெலிவரியை வைத்துவிட்டு வரவேண்டிய சூழலில், அதைப் புகைப்படம் எடுத்து கஸ்டமருக்கு அனுப்பி உறுதிப்படுத்தி விட்டுத்தான் அங்கிருந்து நகர்வோம். முன்பு ஒவ்வொரு ஆர்டருக்கும் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் பணம் கிடைக்கும். இப்போது அதெல்லாம் கிடைப்பதேயில்லை. கிடைப்பது கிடைக்கட்டும் என்றுதான் உயிரைப் பணயம் வைத்து வேலைபார்த்துக்கொண்டிருக்கிறோம்.’’

பொழப்பு இருக்குது... பயமும் இருக்குது!

பாலாஜி, மேடவாக்கம்

‘`நான்கு ஆண்டுகளாக ஸொமேட்டோவில் வேலைபார்க்கிறேன். கொரோனா லாக்டௌனுக்குப் பின் வாரம் மூவாயிரம் கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. முன்னர் உணவு டெலிவரிதான் அதிகமாக இருக்கும். இப்போது காய்கறி மற்றும் மளிகை சாமான் டெலிவரிதான் அதிகம் வருகிறது. விடுதியில் மற்றும் பேயிங் கெஸ்ட்டாகத் தங்கியுள்ள வர்கள்தான் அதிகம் உணவு வாங்குகிறார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் டெலிவரி வழங்கும் முன், சானிட்டைசர் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வோம். மாஸ்க் அணிந்துகொள்வோம். ‘கொரோனா பாதித்த வீடு’ ஸ்டிக்கர்களைப் பார்த்தபோது ஆரம்பத்தில் ‘திக்’கென இருந்தாலும் இப்போது பழகிவிட்டது. இந்தக் கொரோனாவால் ஒரே ஒரு நன்மை, அப்பார்ட்மென்ட் டெலிவரிகளில் மாடி ஏறி, இறங்கத் தேவையில்லை. அவர்களே வாயிலில் வந்து டெலிவரியை வாங்கிச் செல்கிறார்கள். பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள், நாங்கள் அழைக்கும்போது போனை எடுத்துப் பேசி எங்களின் சேவைக்கு ஒத்துழைத்தால் போதும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism