Published:Updated:

`13 ஆண்டுகளாக ரேபிஸ் இல்லை; நாட்டிலேயே முதல் மாவட்டம்!’ - நீலகிரி ஆய்வாளர்கள் பெருமிதம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ரேபிஸ் நோய் கண்டறியப்படாத நிலையில் ரேபிஸ் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

Louis Pasteur
Louis Pasteur ( Arun.K )

நாய் மற்றும் வௌவாலில் இருந்து மனிதர்களுக்கு பரவும் மிக மோசமான நோய்களில் ஒன்றுதான் ரேபிஸ். நாய், வௌவால்,குதிரை போன்ற விலங்குகளை மிக எளிதில் தாக்கும் இந்த வைரஸ் அவற்றையும் ஆட்டிவைக்கிறது.அதே சமயம் ரேபிஸ் தொற்று உள்ள விலங்குகள் மனிதர்களை கடிக்கும்போது மனிதர்களுக்கும் இந்த வைரஸ் ரத்தத்தில் கலந்து நம்பமுடியாத மோசாமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

pasteur institute of india
pasteur institute of india

உலகில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு மனிதன் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக சுகாதார ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 20,000-க்கும் அதிகமானவர்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறன்றனர்.ரேபிஸ் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற தீவிரத்தில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த லூயி பாஸ்டியர் (Louis Pasteur) இறந்த தினமான செப்டம்பர் 28-ம் தேதி உலக ரேபிஸ் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Vikatan

ரேபிஸ் நோய் தடுப்புக்கும் நீலகிரிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.லூயி பாஸ்டியர் பெயரில் 1907 ம் ஆண்டு குன்னூரில் ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டு தமிழகம், கேரளா,கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் ரேபிஸை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றி வருகிறது. இது மத்திய அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13 ஆண்டாக ரேபிஸ் நோய் கண்டறியப்படவில்லை .

pasteur institute of india
pasteur institute of india

இது குறித்து பாஸ்டியர் நிறுவனத்தின் இயக்குநர் சிவகுமார் பேசுகையில், ’’கடந்த 2008-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் ரேபிஸ் நோய் காணடறியப்படவில்லை. இதனால், நாட்டில் ரேபிஸ் இல்லாத மாவட்டமாக கடந்த 13 ஆண்டுகளாக விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் இந்த மையத்தில் ரேபிஸ் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இடையில் சில காரணத்தால் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து மருந்துகள் வாங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. முத்தடுப்பு மருந்து தயாரிக்கும் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் உற்பத்தி துவங்கும்" என்றார்.

உலகளாவிய வளர்ப்பு பிராணி மருத்துவ மைய நிர்வாகி நைஜில் கூறுகையில், ``நீலகிரியில் கடந்த 15 ஆண்டுகளாக நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் சுமார் 30,000 நாய்களுக்கு குடும்ப காட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாய் வளர்ப்போரிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

pasteur institute of india
pasteur institute of india

இது குறித்து நாய் வளர்ப்போர் கூறுகையில், ``ரேபிஸ் நோய்க்கான ஆய்வகம் செயல்படும் நீலகிரியில் தற்போது நாய்களுக்கு போடப்படும் ரேபிஸ் நோய் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனையில் கூட 500 ரூபாய் செலுத்தியே வாங்க வேண்டும் என்ற நிலை. எனவே, எளிய மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இலவசமாக தடுப்பு மருந்து கிடைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர் .