இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் விற்பனைக்காக ரூ171.74 கோடி ராயல்டி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கோவிட் 19 தடுப்பூசியான கோவாக்சினின் ஆராய்ச்சிக்காகவும், அத்தடுப்பூசியின் செயல்திறன் மேம்பாட்டிற்காகவும் சுமார் ரூ.35 கோடி வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செலவிட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியானது, அவசர கால ஆராய்ச்சி, ஆராய்ச்சித்திறன் மேம்பாடு போன்ற பல சுகாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியுடன் இணைந்து உருவாக்கியது, பாரத் பயோடெக் நிறுவனம்.

இதன் அடிப்படையில் கோவாக்சின் விற்பனைக்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து ஜனவரி 31-ம் தேதி வரை ராயல்டி தொகையாக ரூபாய் 171.74 கோடி பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.