Published:Updated:

சீனா சென்று வந்தவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறையின் நோய்த்தடுப்பு அறிவுறுத்தல்கள்!

corona virus
corona virus

சீனாவிலிருந்து திரும்பிய 28 நாள்களுக்குள் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருக்கிறதா என்பதில் விழிப்புடன் இருங்கள்.

கொரோனா வைரஸ் குறித்த பீதி உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், மத்திய சுகாதாரத்துறை கடந்த 14 நாள்களில் சீனாவுக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்புக்கு சில வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.

''சமீபத்தில் அல்லது கடந்த இரண்டு வாரங்களுக்குள் சீனாவுக்குச் சென்று வந்திருப்பவர்கள், 'நாம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியிருப்போமோ' என்கிற சந்தேகம் ஏற்படுபவர்கள், கீழ்க்காணும் பாதுகாப்பு வழிமுறைகளை ஃபாலோ செய்யுங்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

* 14 நாள்கள்வரை தனிமையில் இருங்கள்.

* தனியறையில் உறங்குங்கள்.

* குடும்பத்தினருடன் தள்ளி நின்றே பேசுங்கள். வெளி நபர்களை சந்திப்பதைத் தவிருங்கள்.

* தும்மும்போதும் இருமும்போதும் வாயையும் மூக்கையும் மூடிக் கொள்ளுங்கள்.

`தும்மல் என்றாலே கொரோனா என பதற்றமடையாதீர்கள்!'- வதந்திக்கு அரசுத் தரப்பில் சொல்வது என்ன?#coronavirus

* சளி, காய்ச்சல் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிருங்கள். மற்றவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளி நின்றே பேசுங்கள்.

* இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை கொரோனா வைரஸ் உங்களையும் தாக்கியிருக்கலாம் என்பதற்கான பொதுவான அறிகுறிகள்.

* சீனாவிலிருந்து திரும்பிய 28 நாள்களுக்குள் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இருக்கிறதா என்பதில் விழிப்புடன் இருங்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு கொள்ளை நோயல்ல... பீதியடைய வேண்டாம் - மருத்துவர் கருத்து

ஒருவேளை மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால், பதற்றமடையாதீர்கள். உடனடியாக மூக்கையும் வாயையும் நன்கு மறைக்கும்படி மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள். உடனடியாக அருகில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனையை நாடுங்கள். மேலதிகத் தகவல்களுக்கு +91-11-23978046 என்கிற எண்ணுக்கு டயல் செய்யுங்கள் அல்லது ncov2019gmail.com-க்கு மெயில் செய்யுங்கள்.''

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பின் செல்ல