Published:Updated:

தேனியில் கொரோனா ஆய்வகம்! -மத்திய அரசு தேர்வு செய்தது எப்படி?

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

தமிழகத்தில், சென்னை கிங்ஸ் ஆய்வகம் மட்டுமே கொரோனா ஆய்வகமாக இருந்தது. இந்நிலையில், மற்றோர் ஆய்வகமாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தைக் கொரோனா ஆய்வகமாக அறிவித்திருப்பது, அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தை, கொரோனோ ஆய்வகமாக அறிவித்தது மத்திய அரசு. ஏன் தேனி மருத்துவமனை ஆய்வகத்தை அறிவிக்க வேண்டும் என விசாரித்தோம்.

மருத்துவமனை வட்டாரத்தில் கேட்ட போது, ``கடந்த மாதம், சீனாவிலிருந்து கேரளா திரும்பிய பெண் ஒருவருக்குக் கொரோனோ தொற்று இருப்பதாகச் செய்திகள் வெளியானதும், கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா சிறப்பு வார்டை அமைத்தது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி
தேனி அரசு மருத்துவக் கல்லூரி
`அன்று கம்பம்.. இன்று போடி!' - தேனி மக்களை உறையவைக்கும் தொடர் கொலைகள்

தொடர்ந்து, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய தேனியைச் சேர்ந்த 5 பேருக்குக் கொரோனா இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு வார்டில் தங்கவைக்கப்பட்டு, அவர்களது ரத்த மாதிரிகளை, மருத்துவமனை ஆய்வகத்தில் ஆய்வு செய்து, அவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இச்சம்பவங்களைக் கவனித்துவந்த மத்திய சுகாதாரத்துறை, தேனி அரசு மருத்துவமனை ஆய்வகத்தைக் கொரோனா ஆய்வகமாக அறிவித்திருக்கிறது” என்றனர்.

இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமோ எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில், சென்னை கிங்ஸ் ஆய்வகம் மட்டுமே கொரோனா ஆய்வகமாக இருந்தது. இந்நிலையில், மற்றோர் ஆய்வகமாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தைக் கொரோனா ஆய்வகமாக அறிவித்திருப்பது, அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இது தொடர்பாக நம்மிடையே பேசிய தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ராஜேந்திரன், “சர்வதேச தரத்திலான ஆய்வகம் நம்மிடம் இருப்பதால், மத்திய அரசு, தேனியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது சென்னைக்கு அடுத்தபடியாக தேனியில் கொரோனா ஆய்வகம் அமைந்துள்ளது” என்றார். ஆய்வகத்திற்கென சிறப்பு ஊழியர்கள் யாரேனும் நியமிக்கப்பட இருக்கிறார்களா? எனக் கேட்டோம். “இல்லை. நம்மிடம் உள்ள மருத்துவர்கள், ஊழியர்களே போதும்தான்” என்றார். ரத்த மாதிரிகள் தேனிக்கு அனுப்பப்படுகின்றனவா? என்ற கேள்விக்கு “இதற்கு முன்னர், ரத்த மாதிரிகளை அனுப்பி ஆய்வு செய்து கொடுக்கச் சொன்னார்கள். அதைச் சிறப்பாகச் செய்தோம். இனி அனுப்பினால் ஆய்வு செய்து ரிசல்ட் கொடுப்போம்” என்றார்.

`தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வகம்!' - மத்திய அரசு அனுமதி
 #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு