Published:Updated:

காஷ்மீரையும் விட்டுவைக்கவில்லை கொரோனா! அங்கே என்ன நிலவரம்? 

Kashmir Virus Outbreak
News
Kashmir Virus Outbreak ( AP / Dar Yasin )

சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட யூனியன் பிரதேசம், இந்தச் சூழலை எப்படிக் கையாளுகிறது?

காஷ்மீருக்கு ஊரடங்கு ஒன்றும் புதிதல்ல. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக, மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தது. அதையடுத்து, காஷ்மீர் பல மாதங்களாக ஊரடங்கு நிலையில்தான் இருந்து வந்தது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்த சூழலில்தான் காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முதல் செய்தியும் வந்தது. சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட யூனியன் பிரதேசம் இந்தச் சூழலை எப்படிக் கையாளுகிறது?

Parsa Book Bank
Parsa Book Bank
Instagram

``இந்த வருடம் எங்களுக்கு ஆகஸ்ட் மாதம் மார்ச் மாதமே வந்துவிட்டது” எனச் சிரித்தபடியே பேசுகிறார்கள் அங்கிருக்கும் நண்பர்கள். அந்த நகைச்சுவையில் இருக்கும் இருள் நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ஆகஸ்ட்டில்தான் கடந்த ஆண்டு அரசு அங்கே ஊரடங்கை அமல்படுத்தியது. ஜாவித் பார்ஸா காஷ்மீரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருபவர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் உணவு மற்றும் மருந்து கிடைக்காத இடங்களுக்கெல்லாம் தேடிச் சென்று உதவியவர். ஆனால், கொரோனா பாதிப்பை அடுத்து தற்போது தேதி அறிவிப்பின்றி தனது ஹோட்டலை மூடியுள்ளார் ``சுகாதாரத்துறையின் அறிவுரையின் பேரில் ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. இப்போதும் உணவுகேட்டு எங்களுக்குத் தொடர் அழைப்புகள் வந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், இதுபோன்ற நேரங்களில் ஹோட்டலை மூடுவதுதான் மக்களுக்குப் பாதுகாப்பானது. ஐந்து மாதங்களாக ஊரடங்குகளில் இருந்த நாங்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். இந்தச் சூழலில் கொரோனா பாதிப்பு எங்களுக்கு பேரிடிதான். இதிலிருந்தும் மீண்டு வருவோம்” என்கிறார் நம்பிக்கையோடு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹோட்டல் மூடப்பட்டாலும் வீட்டிலேயே தங்கியிருப்பவர்களுக்குப் படிக்க புத்தகம் வழங்குவதற்காக புத்தக வங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் ஜாவித்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காஷ்மீரில் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு, ஜம்முவில் இருவருக்குக் கொரோனா பாதிப்பு எனச் செய்தி வேகமாகப் பரவியதால், அந்தப் பிரதேசங்களின் சுகாதாரத்துறை விழித்துக்கொண்டிருக்கின்றது. லடாக்கில் 10 ராணுவ வீரர்கள் தனித்து வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். லேஹ் பகுதியில் நோய்த்தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை பத்தாக அதிகரித்திருப்பதால் அங்கிருந்து காஷ்மீர் வரும் அனைவரும் தனித்து வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று காஷ்மீரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kashmir Virus Outbreak
Kashmir Virus Outbreak
AP / Dar Yasin

மாநிலத்துக்குள் பேருந்து சேவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற `தால்’ ஏரியில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டு, அங்கு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விமானநிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இவைதவிர பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 21 பேர் கொண்ட மருத்துவக் குழு ஸ்ரீநகரின் வீடுகளுக்குச் சென்று யாருக்கேனும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றி 300 மீட்டர் அளவில் இருக்கும் வீடுகளில் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக மீண்டும் ஒருமுறை முடக்கப்பட்டிருக்கிறது ஜம்மு மற்றும் காஷ்மீர்.

Kashmir Virus Outbreak
Kashmir Virus Outbreak
AP / Dar Yasin

இதுகுறித்துப் பகிர்ந்துகொள்ளும் காஷ்மீர் செயற்பாட்டாளர் சுஷோபா பர்வே, ``இந்த ஊரடங்கு எங்களுக்குப் புதிது அல்ல. ஏற்கெனவே இங்கே அமலில் இருந்ததுதான். ஒரே வித்தியாசம் முன்பு அமலில் இருந்த ஊரடங்கில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் இருந்தோம். தற்போது 2ஜி வசதி இருப்பதால் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க முடிகிறது. பிரிவு 370 முடக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் முக்கியம்தான். ஆனால் அதைவிட சக மனிதர்களுக்கு நம்மிடமிருந்து நோய் தொற்றிக்கொண்டுவிடக் கூடாது என்கிற எண்ணம் முதன்மையானது. அதனால் ஓர் அக்கறையுள்ள பிரஜையாக இந்தமுறை எங்களை நாங்களே வீட்டுக்குள் பூட்டிக்கொண்டுள்ளோம். சிறுசிறு வணிகங்கள்தான் இங்கே அதிகம். இதனால் அவர்களுடைய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களைச் சார்ந்திருக்கும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உணவு தேவைப்படும் வீடுகளுக்கு அருகில் இருக்கும் வீட்டினர் உதவுகிறார்கள். அரசு ஏற்படுத்திய ஊரடங்கிலிருந்து மீண்டு இப்போதுதான் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைச் சரிகட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை கொரோனாவுக்கான ஊரடங்கு பாதித்துள்ளது” என்கிறார்.