Published:Updated:

தமிழகத்தில் கட்டுக்கடங்காத கொரோனா பரவல் - பொங்கல் சீஸனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது அரசு?

ஒமைக்ரான் பரவல்
News
ஒமைக்ரான் பரவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சுழலில் பண்டிகை நாள்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது அரசு..?

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் யாரும் அவ்வளவு எதிலும் மறந்திருக்க மாட்டோம். பாதிப்பு மிக அதிகமாக இருந்ததற்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் உலகின் 185-க்கும் அதிகமான நாடுகளில் பரவியது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கொரோனா பணி
கொரோனா பணி

டெல்டா வகை வைரஸ் அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்டது. மேலும், உடலில் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இரண்டாம் அலை தொடக்கத்தில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 300-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 36 ஆயிரம் வரை பதிவானது. மக்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், ஆக்சிஜன் கிடைக்காமல், மருந்து கிடைக்காமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகளையெல்லாம் நாம் கண்முன்னே கண்டோம். தமிழக அரசு பல்வேறு தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் அதிகரித்திருந்த தொற்றைப் படிப்படியாகக் குறைத்து கட்டுக்குள் கொண்டுவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா:

இந்தியா முழுவதும் தினசரி பாதிப்பு அளவு சுமார் 6,000 வரை சென்றது. கடந்த 200 நாள்களில் இல்லாத அளவுக்கு 1,40,000-க்கும் அதிகமான அளவுக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. ஜனவரி 10-ம் தேதி நிலவரப்படி, 7,23,619 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். அன்றைய தினம் 146 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நாளொன்றுக்கு 13.5 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,05,973 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜனவரி 9-ம் தேதி நிலவரப்படி, புதிதாக 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 40,260 பேர் கொரோனா பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். நேற்றைய தினம் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு 1.3 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 600 என்றிருந்த நிலையில், தற்போது பாதிப்பு பத்தாயிரத்தையும் கடந்துள்ளது. மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 6,186 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``தமிழகத்தில் தற்போது அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கைக்கு ஒமைக்ரான் பரவல்தான் காரணம். கடைசியாக அனுப்பப்பட்ட 74 மாதிரிகளில் 64 மாதிரிகள் ஒமைக்ரானும், 10 மாதிரிகள் டெல்டா வகையும் இருந்தது மரபியல் பரிசோதனையில் தெரியவந்தது. இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு பொதுமக்கள், அரசு கூறியுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பெரிய கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

மேலும், ``ஒரு பக்கம் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க, இரவு நேர ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அரசு, கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொதுமக்கள் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றினால்தான் முழுப்பலன் கிடைக்கும். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 1.21 லட்சம் படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. மேலும், 50,000 படுக்கைகள் அதிகரிக்கப்படும். யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளும் அனைத்துப் பகுதிகளிலும் தயார்நிலையில் இருக்கின்றன. பதற்றம் வேண்டாம், அதே சமயத்தில் அலட்சியம் கூடவே கூடாது" என்றார்.