Published:Updated:

புதுச்சேரி: திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா! - ஒரே கிராமத்தைச் சேர்ந்த 23 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் மஞ்சள் நீராட்டுவிழாவுக்குச் சென்ற 23 பேருக்கும், அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாள்களாகப் படிப்படியாகக் குறைந்துவந்தது. இந்தநிலையில், கடந்த வாரம் குருவிநத்தம் கிராமத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற்றது. அந்த விழாவுக்குச் சென்று வந்த சோரியாங்குப்பம் கிராம மக்களுக்கு கொரோனா அறிகுறிகளுடன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த இரு நாள்களாக மருத்துவமனைக்குச் சென்ற அந்த கிராமத்து மக்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அந்த கிராமத்துக்குச் சென்ற சுகாதாரத்துறையினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுவருகின்றனர். அந்த சோதனையில் நேற்று 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 23 பேரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

கொரோனா சிகிச்சை பிரிவு
கொரோனா சிகிச்சை பிரிவு
மாதிரிப் படம்
ஒரே பள்ளியைச் சேர்ந்த 229 மாணவர்களுக்குத் தொற்று! - கொரோனா அலர்ட்டில் மகாராஷ்டிரா

புதுச்சேரியில் தொற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்ததால், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. முதற்கட்டமாக ஒன்பது முதல் ப்ளஸ் டூ வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. சில நாள்களுக்கு முன்பு கிருமாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கும், ஒரு பேராசிரியருக்கும் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. அதேபோல சில தினங்களுக்கு முன்பு கரையாம்புத்தூரிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகளுடன் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்குச் சோதனை நடத்தியதில் அவர்கள் மூவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அதையடுத்து அந்த மாணவர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்கணித்துவருகிறது சுகாதாரத்துறை.

கோவை: 9-ம் வகுப்பு மாணவர்கள் மூவருக்கு கொரோனா உறுதி! - 3 நாள்களுக்குப் பள்ளியை மூட உத்தரவு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு