Published:Updated:

'மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு; ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தீவிரம்!' - மா.சுப்ரமணியன்

கொரோனா வைரஸ்

கன்னியாகுமரியில் 10 பேருக்கும், திருவள்ளூரில் 16 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும், சென்னையில் அதிகப்படியாக 171 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

'மீண்டும் தலைதூக்கும் கொரோனா பாதிப்பு; ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தீவிரம்!' - மா.சுப்ரமணியன்

கன்னியாகுமரியில் 10 பேருக்கும், திருவள்ளூரில் 16 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும், சென்னையில் அதிகப்படியாக 171 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Published:Updated:
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றின் பரவல் ஓய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில், மீண்டும் அச்சுறுத்தும் வகையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, தொற்று பரவாமல் இருக்க சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியவர், “தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரியில் 10 பேருக்கும், திருவள்ளூரில் 16 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும், சென்னையில் அதிகப்படியாக 171 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே சென்னையில் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பிற அலுவர்களுடனான கலந்தாய்வு நடைபெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கலந்தாய்வில், தொற்றின் எண்ணிக்கை குறித்தும் அவை பரவாமல் இருக்கும் நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டது.

கொரோனா
கொரோனா

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அதோடு தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 781 பேர் தங்கி இருக்கும் வீடுகளில், ஏறத்தாழ 684 வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிகப்படியான மக்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளுக்குச் செல்வது தவிர்க்கப்படும். கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மேற்கொள்ளப் படும்” என தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism