Published:Updated:

`ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்திய மருத்துவமனைப் படுக்கைகளில் பற்றாக்குறை ஏற்படும்!' - `தி ப்ரின்ட்' கணக்கு

'தி ப்ரின்ட்' கணக்கு
News
'தி ப்ரின்ட்' கணக்கு

அவசரகால சூழ்நிலைகளில் இந்திய மருத்துமனைகளின் செயல்பாடு என்ன ஆகும், இந்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது 'தி ப்ரின்ட்'. அதிர்ச்சி தரும் அவர்களின் தரவுகள் இதோ...

இந்தியாவில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகளவில் உயர்ந்துவருகிறது. அடுத்த சில வாரங்களில் பலரும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு இந்த எண்ணிக்கை உயரும் என்று ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் 'தி பிரின்ட்' டிஜிட்டல் பத்திரிகை, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடந்த காலம் மற்றும் நிகழ்காலத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றியும், அவசரகால சூழ்நிலைகளில் இந்திய மருத்துமனைகளின் செயல்பாடு என்ன ஆகும், இந்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதிர்ச்சி தரும் அவர்களின் தரவுகள் இதோ...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதிவேக வளர்ச்சியில் இந்தியா

'இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 50-ஐ எட்ட 40 நாள்கள் ஆனது. பிறகு, ஐந்து நாள்களில் 100 எண்ணிக்கையைத் தொட்டது. இப்படி ஐந்து நாள்களில் இரட்டிப்பானது, உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பாதையிலேயே இந்தியாவும் பயணிக்கிறது என்பதற்கான அறிகுறியே.

Corona in India
Corona in India

சீனா, இத்தாலியின் நிலை இந்தியாவுக்கு ஏற்படாமல் இருக்க, பிசிக்கல் டிஸ்டன்ஸிங், ஊரடங்கு போன்றவற்றைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் மட்டுமே நோய் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். மேலும், தற்போது வெளிவரும் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களுடையது மட்டுமே. உண்மையான எண்ணிக்கையை அறிய, இந்தியா அதன் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

உலக சுகாதார அமைப்பால் கணக்கிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் விதமாக, 3.4% என்ற இறப்பு விகிதத்தை எடுத்துக்கொண்டால், மே மாத இறுதிக்குள் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுவார்கள். 30,000-க்கும் மேற்பட்ட இறப்புகளும் இந்தியாவில் எதிர்பார்க்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது. இவை பழைய முறைகள் மூலம் கணக்கிடப்பட்டவைதான். உயிர் புள்ளியியல் (bio-statistician) வல்லுநர்கள் predictive modelling-ஐ பயன்படுத்திக் கணித்தபோது எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Hospitals in India
Hospitals in India

தற்போது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையைவிட எட்டு மடங்கு கண்டுபிடிக்கப்படாத நோயாளர்கள் இருப்பார்கள் என்று கருதும் இந்திய மென்பொருள் தொழில்முனைவோர் மயாங்க் சாப்ரா (Mayank Chhabra), மே மாத இறுதிக்குள் 50 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாசிட்டிவ் கேஸ்களும், 1.7 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளும் இருக்குமென மதிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகள் திணறும்!

2017-ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய மருத்துவமனைகளில் 1,000 பேருக்கு வெறும் 0.5 படுக்கைகள் என்ற விகிதத்தில் இருக்கின்றன. இந்திய சுகாதார உள்கட்டமைப்பின் இந்நிலை வரும் மாதங்களில் முற்றிலும் மாறுபடும். உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் தற்போதைய எண்ணிக்கை அதிகரித்தல் விகிதத்தை வைத்துக் கணக்கிடும்போது, ஜூன் மாதத் தொடக்கத்தில், இந்திய மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கான படுக்கைகள் இன்றித் திணறும் வாய்ப்பிருக்கிறது. சாதாரண படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக இரட்டிப்பாகும் விகிதத்தை வைத்துக் கணிக்கையில், ஏப்ரல் மாத இறுதிக்குள் மருத்துவமனைப் படுக்கைக்கு இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lack in facilities
Lack in facilities

இந்தியாவில் க்ரிட்டிக்கல் கேர் (Critical Care) பராமரிப்புப் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை. ஆனால், அவை மிகக் குறைந்த அளவில்தான் இருக்குமென நம்பப்படுகிறது. தேசிய அளவில் ஐ.சி.யூ படுக்கைகள் 70,000 இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10 செட் நோயாளர்களில் ஒருவருக்கு ஐ.சி.யூ படுக்கை தேவைப்பட்டால்கூட, மே மாத இறுதிக்குள் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

Doctors
Doctors
Vikatan

ஏற்கெனவே இத்தாலிய மருத்துவர்கள் எந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் தேவைப்படும், யாருக்குத் தேவைப்படாது என்பதை முடிவு செய்வதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். மேலும், மருத்துவப் பொருள்களைத் தயார்செய்வதற்கு ராணுவத்தை அணுகியுள்ளனர். அவர்களுக்கு உதவ அமெரிக்கா முன்வந்திருக்கிறது. இந்நிலையில், 'தங்களிடம் போதுமான அளவு வென்டிலேட்டர்கள் இருக்கின்றன' என்பதை மட்டுமே இந்திய அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கிறதே தவிர, மிகப்பெரிய சிக்கலான விஷயம் குறித்து அரசாங்கம் மிகவும் அலட்சியமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சில மாநிலங்கள் கடுமையாகப் போராடும்

உடல்நலம் உட்பட அனைத்து விஷயங்களிலும் இந்திய மாநிலங்கள் பரவலாக வேறுபடுகின்றன. போதிய சுகாதார வசதிகளற்ற ஏழ்மையான மாநிலங்களும் இந்தியாவில் நிறைய உள்ளன. பீகாரில் ஒவ்வொரு 1 லட்சம் மக்களுக்கும் ஓர் அரசு மருத்துவமனை படுக்கை மட்டுமே உள்ளது. கோவாவில் 20 படுக்கைகள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட சிகிச்சைத் திட்டம் இருந்தபோதிலும், புதிய நுண்ணுயிரியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட காசநோய் பாதிப்பு ஏற்பட்டபோது, உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சை வெற்றி விகிதம் வெறும் 64 சதவிகிதம் மட்டுமே இருந்தது.

Corona
Corona
Vikatan
`மாநிலங்களின் இதுபோன்ற சுகாதார உள்கட்டமைப்பின் பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்திய அரசாங்கத்தால் உதவ முடியும் என்பதற்கு எந்தத் தெளிவான அறிகுறியும் இதுவரை இல்லை. நம்மை நாம் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்வதுதான் ஒரே வழி.'
இவ்வாறு குறிப்பிடுகிறது 'தி ப்ரின்ட்' கட்டுரை

எத்தனையோ கொடுமையான தொற்றுநோய்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறது இந்தியா. இத்தாலி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இப்போது எதிர்பாரா அவசரகால நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையில் எடுத்திருக்கும் இந்திய அரசாங்கம் இனி வரும் நாள்களைக் கடப்பதுதான் மிகப் பெரிய சவால். நோய் பரவலைக் கட்டுப்படுத்த 'பிசிக்கல் டிஸ்டன்ஸிங்' நம் அனைவரிடத்திலும் இருக்கும் மிகப் பெரிய ஆயுதமென்றே சொல்லலாம்.