Published:Updated:

`புழல் சிறையில் இரண்டே நாள் தங்கிய கைதிகள்..!' - பாளையங்கோட்டை சிறைக்கும் பரவிய கொரோனா

ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள்

புழல் சிறையில் இரு தினங்கள் தங்கியிருந்துவிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்த கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இருவருக்குப் பாதிப்பு இருப்பது உறுதியானது.

`புழல் சிறையில் இரண்டே நாள் தங்கிய கைதிகள்..!' - பாளையங்கோட்டை சிறைக்கும் பரவிய கொரோனா

புழல் சிறையில் இரு தினங்கள் தங்கியிருந்துவிட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்த கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இருவருக்குப் பாதிப்பு இருப்பது உறுதியானது.

Published:Updated:
ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் என 1,300 பேர் தங்கியிருக்கிறார்கள். 

பாளையங்கோட்டை மத்திய சிறை
பாளையங்கோட்டை மத்திய சிறை

பாளையங்கோட்டை சிறையில் உள்ள இரு தண்டனைக் கைதிகளுக்குக் கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. அதனால் சந்தேகம் அடைந்த சிறைத்துறையினர் இதுகுறித்து மருத்துவர்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால் அந்தக் கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனா பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய சிறை
மத்திய சிறை

சிறைக் கைதிகள் இருவருக்கும் நோய்த் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. அதில், கைதிகள் இருவரையும் சமீபத்தில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்ற விவரம் தெரியவந்திருக்கிறது.

சென்னையில் புழல் சிறையில் இருவரையும் இரு தினங்கள் தங்க வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து இருவரும் கடந்த 17-ம் தேதி பாளையங்கோட்டை அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இங்கு வந்த பின்னர் இருவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

கிருமி நாசினி தெளிக்கும் பணி
கிருமி நாசினி தெளிக்கும் பணி

இந்த நிலையில், இருவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதியானதால் சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இரு கைதிகளையும் சென்னைக்கு அழைத்துச் சென்றபோது உடன் சென்ற போலீஸாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.