Published:Updated:

`ஃபிளேவர் சிகரெட்டுக்கு பதில் வெறுக்கத்தக்க, சுவையற்ற சிகரெட் தயாரிக்க வேண்டும்' - ஆஸ்திரேலிய அரசு

Cigarette
News
Cigarette ( pixabay )

மக்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க, ஃபிளேவர் சிகரெட்டுகளை தடை செய்து, ஒருவரை கவராத வகையில் வெறுக்கத்தக்க, சுவையற்ற சிகரெட்களை தயாரிக்க சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு, சிகரெட் பாக்கெட்களில் மக்களை ஈர்க்கும் வகையில் இடம்பெறும் கவர்ச்சிகரமான கிராஃபிக்ஸை நிறுத்த வேண்டும் என்று நிறுவனங்களுக்கு அவ்வரசு கூறியிருந்தது. தற்போது, உள்ளிருக்கும் சிகரெட்களை குறிவைத்து, மக்களைக் கவராத வகையில் சிகரெட்களை தயாரிக்கக் கூறியுள்ளது.

`ஃபிளேவர் சிகரெட்டுக்கு பதில் வெறுக்கத்தக்க, சுவையற்ற சிகரெட் தயாரிக்க வேண்டும்' - ஆஸ்திரேலிய அரசு

இந்த புதிய உத்தரவு குறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் கூறுகையில், ``சாதாரண பேக்கிங்கை குறிவைப்பதிலிருந்து, பாக்கெட்டுக்குள் இருக்கும் சிகரெட்டுகளை குறிவைப்பதை இலக்காக வைத்து, நாடு ஒரு படி முன்னேற விரும்புகிறது.

சிகரெட்களுக்கு ஒரே வண்ணங்களைப் பயன்படுத்துவது, சிகரெட்களில் நேரடியாகச் சுகாதார எச்சரிக்கைகளை அச்சிடுவது, சிகரெட்டின் வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றை தரப்படுத்துவது, சிகரெட்டில் சேர்க்கப்படும் சேர்க்கைகளை தடை செய்வது போன்ற புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

இப்படிச் செய்யும் பட்சத்தில் 2025-ம் ஆண்டிற்குள், நாள்தோறும் புகைப்பவர்கள் எண்ணிக்கை 10 சதவிகிதத்திற்கும் குறைவாகும். அதற்கடுத்த மூன்று வருடங்கள் அல்லது 2030-களில், ஐந்து சதவிகிதமாகக் குறையும்'' என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார்.